பொது செய்தி

தமிழ்நாடு

கேபிள் 'செட்-டாப் பாக்ஸ்' பிரச்னை தாசில்தாரிடம் குவியும் புகார்கள்

Added : மே 02, 2021
Share
Advertisement
கொடைரோடு: அம்மையநாயக்கனூரில் கேபிள் சந்தாதாரர்களின் செட்டாப் பாக்ஸ்களை, தனியார் இணைப்புக்காக வற்புறுத்தி மாற்றுவதாக புகார் குவிகிறது.சில வாரங்களாக அம்மையநாயக்கனூர், கொடைரோடு, பள்ளபட்டி, சிலுக்குவார்பட்டி பகுதிகளில் கேபிள் இணைப்புகளில் ஒளிபரப்பு பாதிப்பு தொடர்கிறது. ஒளிபரப்பு தடைபடும் நேரம் வெகுவாக அதிகரித்துள்ளது.செட்டாப் பாக்ஸ்களில் பழுது இருப்பதாகக்கூறி,

கொடைரோடு: அம்மையநாயக்கனூரில் கேபிள் சந்தாதாரர்களின் செட்டாப் பாக்ஸ்களை, தனியார் இணைப்புக்காக வற்புறுத்தி மாற்றுவதாக புகார் குவிகிறது.சில வாரங்களாக அம்மையநாயக்கனூர், கொடைரோடு, பள்ளபட்டி, சிலுக்குவார்பட்டி பகுதிகளில் கேபிள் இணைப்புகளில் ஒளிபரப்பு பாதிப்பு தொடர்கிறது. ஒளிபரப்பு தடைபடும் நேரம் வெகுவாக அதிகரித்துள்ளது.செட்டாப் பாக்ஸ்களில் பழுது இருப்பதாகக்கூறி, அரசு கேபிள் டிவிக்கான செட்டாப் பாக்ஸ்களை மாற்றுகின்றனர். மாதாந்திர ரீசார்ஜ், சர்வீஸ் கட்டணமாக, ரூ.300 முதல் 450 வரை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட கேபிள் நிர்வாக அதிகாரிக்கு புகார்கள் குவிகின்றன. இப்பகுதியினர் கூறுகையில், "தேர்தல் முடிவுக்கு ஏற்ப கேபிள் நிர்வாகத்தில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதால் செட்டாப் பாக்ஸ்களை மாற்ற அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தினர். சில ஆபரேட்டர்கள் வினியோகத்தை நிறுத்தி, செட்டாப் பாக்ஸ்களை தனியார் நிறுவன இணைப்புக்கு ஏற்ப மாற்றி வருகின்றனர்" என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X