சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் கொேரானா பாதிப்புக்கு 4 பேர் பலி

Added : மே 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: மிரட்டும் 'கொரோனா' வுக்கு திண்டுக்கல்லில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகினர்.கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் புதிதாக 200 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். நேற்று 220 பேர் உட்பட இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 17 பேரை கொரோனா தாக்கியுள்ளது. 14 ஆயிரத்து 225 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்னும் 1,578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திண்டுக்கல்: மிரட்டும் 'கொரோனா' வுக்கு திண்டுக்கல்லில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகினர்.கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் புதிதாக 200 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். நேற்று 220 பேர் உட்பட இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 17 பேரை கொரோனா தாக்கியுள்ளது. 14 ஆயிரத்து 225 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்னும் 1,578 பேர் சிகிச்சையில் உள்ளனர். திண்டுக்கல்லிலும் சில நாட்களாக உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 2 பேர் பலியாகினர்.நேற்று 58 வயது பெண், 76, 66, 73 வயதுடைய ஆண்கள் என ஒரே நாளில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவலை தடுக்க, தடுப்பூசி போட்டு வந்தாலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் 100 சதவீதம் கடை பிடித்தால் மட்டுமே பாதிப்பை தடுக்க முடியும். இல்லையெனில் வரும் நாட்களில் பாதிப்பு இரு மடங்காக வாய்ப்புள்ளது என, சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X