பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு சரக்கு விற்பனை

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:'டாஸ்மாக்' மதுக்கடைகளில், நேற்று முன்தினம் மட்டும், 292 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,330 மதுக்கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபானங்களை விற்பனை செய்கிறது.இது, வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், வழக்கத்தை விட அதிகரிக்கும். திருவள்ளுவர் தினம் உட்பட, ஆண்டுக்கு எட்டு
 மதுக்கடைகளில் ஒரே நாளில்  ரூ.292 கோடிக்கு சரக்கு விற்பனை

சென்னை:'டாஸ்மாக்' மதுக்கடைகளில், நேற்று முன்தினம் மட்டும், 292 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 5,330 மதுக்கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபானங்களை விற்பனை செய்கிறது.இது, வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், வழக்கத்தை விட அதிகரிக்கும்.

திருவள்ளுவர் தினம் உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை. அதில், மே தினமும் அடங்குவதால், நேற்றும்; சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மற்றும் முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்றும், மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் உத்தரவிட்டது.

அதனால், வெள்ளிக்கிழமை மதியம், 12:00 மணிக்கு மதுக்கடைகளை திறந்தது முதல், இரவு, 9:00 மணிக்கு மூடப்படும் வரை, 'குடி'மகன்களின் கூட்டம் அலைமோதியது.இதையடுத்து, நேற்று முன்தினம் மட்டும், 292 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாயின. அதில், சென்னை மண்டலத்தில், 63 கோடி; மதுரையில், 60 கோடி; திருச்சியில், 57 கோடி; கோவையில், 56 கோடி; சேலத்தில், 56 கோடி ரூபாயும் அடங்கும்.இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், ஆட்சியை பிடிக்கும் கட்சியினர், இன்று மாலை முதல் உற்சாகத்தில் மிதப்பர். அதனால், இந்த வாரம் முழுதும், டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X