பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு: சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

Added : மே 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: 'வரும் நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரிக்கும்' என சுகாதாரத்துறையினர் கணித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் தினமும் 200 முதல் 250 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தொற்று பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் இட வசதியை தயார் படுத்தும் கட்டாயம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மே 2ஆவது வாரம்
 திண்டுக்கல்லில் கொரோனா  பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு: சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல்: 'வரும் நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரிக்கும்' என சுகாதாரத்துறையினர் கணித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் தினமும் 200 முதல் 250 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தொற்று பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் இட வசதியை தயார் படுத்தும் கட்டாயம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மே 2ஆவது வாரம் தினமும் தொற்று பாதிப்போர் எண்ணிக்கை 350 ஆக உயரும் வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.தற்போது 2ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோனை நடத்தப்படுகிறது. இதனை அதிகரிக்கும்போது பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம்.மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தொற்று அதிகரிப்பதால், கல்லூரி வளாகங்களில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த உள்ளோம். தொற்று பாதிப்பு குறைவாக இருப்போரை வீடுகளிலேயே தனிமைப்படுத்த ஆலோசிக்கிறோம். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதையும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X