சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்..

Added : மே 02, 2021
Share
Advertisement
பெண் மாயம்வடமதுரை: மோளப்பாடியூர் முத்துச்சாமி மகள் துர்கா முத்தீஸ்வரி 18. கடந்த ஏப்.10ல் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடுதிரும்பவில்லை. தந்தை அளித்த புகாரில் வடமதுரை போலீசார் துர்காமுத்தீஸ்வரியை தேடி வருகின்றனர்.பணியாளர்களுக்கு பாராட்டுவத்தலக்குண்டு: பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்களை

பெண் மாயம்

வடமதுரை: மோளப்பாடியூர் முத்துச்சாமி மகள் துர்கா முத்தீஸ்வரி 18. கடந்த ஏப்.10ல் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடுதிரும்பவில்லை. தந்தை அளித்த புகாரில் வடமதுரை போலீசார் துர்காமுத்தீஸ்வரியை தேடி வருகின்றனர்.

பணியாளர்களுக்கு பாராட்டுவத்தலக்குண்டு: பேரூராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் பரிசுகள், இனிப்பு வழங்கி கவுரவித்தார். துப்புரவு ஆய்வாளர் செல்வி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

இருவர் கைதுபழநி: பழைய தாராபுரம் ரோட்டில் ஏப்.,20ல் செல்வம் என்பவர் காரில் ரூ.5 லட்சத்துடன் சென்றார். அந்தப் பணத்தை சிலர் கொள்ளையடித்துச் சென்றனர். போலீஸ் விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஆறுமுகம் மகன் நந்தா 20, கோவை மாவட்டம் ஆனைமலை பெரியசாமி மகன் சதீஷ்குமார் 20, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.பழநியில் குரங்குகள் அவதிபழநி: கொரோனாவால் பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. மலையில் பலநுாறு குரங்குகள் உள்ளன. பக்தர்கள் இல்லாததால் அக்குரங்குகள் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றன. அவை பெரும்பாலும் கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே வசிக்கின்றன. தற்போது உணவு பற்றாக்குறையால் நகருக்குள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடுகின்றன. கோயில் அதிகாரிகள் வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X