பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியுடன் ஓட்டுஎண்ணிக்கை மேஜை அமைப்பு

Added : மே 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: கொரோனா முன்னெச்சரிக்கையாக, ரெட்டியார்சத்திரம் ஓட்டும் எண்ணும் மையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று (மே 2) ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கட்சி முகவர்கள் காலை 6:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்பாக படிவம் 18 மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும்.மையத்திற்குள் அலைபேசிக்கு

திண்டுக்கல்: கொரோனா முன்னெச்சரிக்கையாக, ரெட்டியார்சத்திரம் ஓட்டும் எண்ணும் மையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று (மே 2) ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கட்சி முகவர்கள் காலை 6:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்பாக படிவம் 18 மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும்.மையத்திற்குள் அலைபேசிக்கு அனுமதியில்லை. வேட்பாளர்கள் அல்லது தலைமை முகவர்கள் மூலம் அலைபேசிக்காக ஒதுக்கிய அறையில் ஒப்படைக்க வேண்டும். ஓட்டு எண்ணும் அறைக்குள் படிவம் 17 சி மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.பதினான்கு மேஜைகள்ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைத்து ஓட்டுகள் எண்ணப்படும். கொரோனா முன்னெச்சரிக்கையாக, சமூக இடைவெளியுடன் மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இம்மேஜைக்கு ஒரு முகவர் வீதம் 14 பேரும், தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு ஒருவர் என மொத்தம் 15 முகவர்களே அனுமதிக்கப்படுவர். தபால் ஓட்டு எண்ணிக்கையின் போது மேஜைக்கு 2 முகவர்கள் அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணும் பணி முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X