பொது செய்தி

தமிழ்நாடு

இறந்தவரை புதைக்க எதிர்ப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வருமா

Added : மே 02, 2021
Share
Advertisement
வேடசந்துார்: கோவிலுாரில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் அடிக்கடி பிரச்னை கிளம்புவதால் நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வேடசந்துார் அருகே கோவிலுாரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான இடுகாடு புளியம்பட்டி ரோட்டருகே உள்ளது. அப்பகுதியில் குடியிருப்புகள் உருவானது, ரோடு அகலப்படுத்தும் பணியால், உடல் அடக்கம் செய்ய அடிக்கடி எதிர்ப்பு

வேடசந்துார்: கோவிலுாரில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் அடிக்கடி பிரச்னை கிளம்புவதால் நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வேடசந்துார் அருகே கோவிலுாரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான இடுகாடு புளியம்பட்டி ரோட்டருகே உள்ளது. அப்பகுதியில் குடியிருப்புகள் உருவானது, ரோடு அகலப்படுத்தும் பணியால், உடல் அடக்கம் செய்ய அடிக்கடி எதிர்ப்பு கிளம்புகிறது.மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு மூதாட்டி இறந்த போது பிரச்னை எழுந்தது. வருவாய் அதிகாரிகள் பேச்சு நடத்தி, இனி யாரையும் இங்கு புதைக்கக்கூடாது என எழுதி வாங்கினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் 60, என்பவர் இறந்தார். இவரது உடலை எடுத்துச் சென்ற போது அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து உடலை நடுரோட்டில் வைத்துவிட்டு உறவினர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.இதையடுத்து போலீசார் வந்து இறந்தவரை அருகிலேயே புதைத்துச் செல்லுங்கள் என்றதால் பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இடுகாட்டை பயன்படுத்தும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X