இலவம் காய்களுக்கு விலையில்லை:பழநி விவசாயிகள் கவலை

Added : மே 02, 2021
Share
Advertisement
பழநி: இலவம் காய்களுக்கு விலையில்லாததால் பழநியில் விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.பழநி அருகே ஆயக்குடி, சட்டப்பாறை, புளியமரத்து செட், தேக்கந்தோட்டம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இலவம் மரங்கள் உள்ளன. தற்போது சீசன் துவங்கியுள்ளதால் இலவங் காய்கள் அதிக அளவில் விளைந்துள்ளது.அதிக பராமரிப்பில்லாத இம் மரம் ஒன்றில் முன்னூறு முதல் ஆயிரம் காய்கள் வரை கிடைக்கும். இவற்றைப் பறித்து

பழநி: இலவம் காய்களுக்கு விலையில்லாததால் பழநியில் விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.பழநி அருகே ஆயக்குடி, சட்டப்பாறை, புளியமரத்து செட், தேக்கந்தோட்டம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இலவம் மரங்கள் உள்ளன. தற்போது சீசன் துவங்கியுள்ளதால் இலவங் காய்கள் அதிக அளவில் விளைந்துள்ளது.அதிக பராமரிப்பில்லாத இம் மரம் ஒன்றில் முன்னூறு முதல் ஆயிரம் காய்கள் வரை கிடைக்கும். இவற்றைப் பறித்து வெயிலில் காய வைக்கின்றனர். ஒரு இலவங்காய் ரூ.1.20க்கு விற்கப்படுகிறது.சட்டப்பாறை விவசாயி ரமேஷ் கூறுகையில், "எனது பராமரிப்பில் 200 மரங்கள் உள்ளன. மரத்திற்கு 300 காய்கள் கிடைக்கிறது. இவற்றை பறிக்க ஆட்கள் தேவை உள்ளது. ஆனால் அதற்கான கூலி அதிகம். மேலும் வாகனச் செலவு, பராமரிப்பு போன்றவற்றைகணக்கிட்டால் அதிக செலவாகிறது. எனது மரங்களில் 5000 காய்களை பறித்து விற்பனை செய்தால் ரூ.6 ஆயிரம் கிடைக்கும். இதற்கு ரூ. 4ஆயிரத்துக்கு மேல் செலவாகும்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X