பொது செய்தி

தமிழ்நாடு

காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் துவக்கம்

Added : மே 02, 2021
Share
Advertisement
கம்பம்: கம்பம் பகுதி கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன. தினமும் 200 பேரிடம் கொரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுக்க சுகாதார பணியாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.கம்பம் வட்டாரத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், புதுப்பட்டி, அண்ணாபுரம், மாலையம்மாள்புரம்,

கம்பம்: கம்பம் பகுதி கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன. தினமும் 200 பேரிடம் கொரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுக்க சுகாதார பணியாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.கம்பம் வட்டாரத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், புதுப்பட்டி, அண்ணாபுரம், மாலையம்மாள்புரம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சூரியகுமார், அமரேசன், பாபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றனர். கிராம செவிலியர்களின் துணையுடன் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டு தேவைப்படின் சிகிச்சை எடுக்கின்றனர். தினமும் 200 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. நடமாடும் மருத்துவக்குழுவினரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X