பயன்பாடு குறைந்ததால் வாழை இலை விலை வீழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாடு குறைந்ததால் வாழை இலை விலை வீழ்ச்சி

Added : மே 02, 2021
Share
ஆண்டிபட்டி: பயன்பாடு குறைவால் வாழை இலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் வைகை ஆற்றின் கரையை ஒட்டி குன்னுார், அரப்படித்தேவன்பட்டி, சீரங்காபுரம், அணைக்கரைப்பட்டி, அய்யர்கோட்டம், வெள்ளையத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதியில் பல ஏக்கரில் வாழை சாகுபடி உள்ளது.சில மாதத்திற்கு முன் நடவு செய்யப்பட்ட கன்றுகள்

ஆண்டிபட்டி: பயன்பாடு குறைவால் வாழை இலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் வைகை ஆற்றின் கரையை ஒட்டி குன்னுார், அரப்படித்தேவன்பட்டி, சீரங்காபுரம், அணைக்கரைப்பட்டி, அய்யர்கோட்டம், வெள்ளையத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதியில் பல ஏக்கரில் வாழை சாகுபடி உள்ளது.சில மாதத்திற்கு முன் நடவு செய்யப்பட்ட கன்றுகள் மரங்களாகி தற்போது இலைகள் அறுவடையாகிறது.சில வாரத்திற்கு முன் கிராக்கியுடன் இருந்த வாழை இலையின் தேவை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் விற்பனை இன்றி தேக்கம் அடைகிறது.டி.அணைக்கரைப்பட்டி விவசாயி ஆனந்தன் கூறியதாவது:கொரோனா பரவலால்தற்போது ஓட்டல்கள் செயல்படவும், சுப நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. இதனால் வாழை இலை பயன்பாடு குறைந்து விட்டது. சீசன் காலத்தில் 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3000 முதல் ரூ.4000 வரை விலை போகும். தற்போது விலைவீழ்ச்சியடைந்து கட்டு ரூ.300 முதல் ரூ. 500 வரையே விற்கிறது. இலைக்கான அறுப்புக்கூலி, வெளியிடத்திற்கு வாகன வாடகை, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி கணக்கிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இலைகள் வீணாவதை தவிர்க்க கிடைத்த விலைக்கு விற்கும் நிலை உள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X