தமிழ்நாடு

தயார்: தேனி மாவட்டம் 4 தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை

Added : மே 02, 2021
Share
Advertisement
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லுாரியில் எண்ணப்படுகிறது. மையத்திற்கு அரசியல் கட்சி ஏஜன்டுகள் படிவம் 18, அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. இவர்கள் வேட்பாளர்கள், தலைமை ஏஜன்டுகள் மூலம்

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லுாரியில் எண்ணப்படுகிறது.

மையத்திற்கு அரசியல் கட்சி ஏஜன்டுகள் படிவம் 18, அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. இவர்கள் வேட்பாளர்கள், தலைமை ஏஜன்டுகள் மூலம் அலைபேசிக்கு ஒதுக்கியுள்ள அறையில் ஒப்படைக்க வேண்டும். ஏஜன்டுகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் மட்டுமே பணியாற்ற வேண்டும். அரசு அலுவலர்கள் வந்து செல்ல அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தபால் ஓட்டுக்கள் காலை 8:00 மணிக்கும், மின்னணு இயந்திரங்களின் பதிவான ஓட்டுக்கள் 8:30 மணிக்கும் எண்ணிக்கை துவங்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி, போடி, கம்பம் தொகுதிக்கு தலா 28 சுற்றுக்கள், பெரியகுளம் தொகுதிக்கு 29 சுற்றுக்களாக ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.கொரோனா பரிசோதனைஓட்டுஎண்ணிக்கை அலுவலர்கள் 3473 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பில்லை என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

அதுதவிர 15 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 1222 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். முகக்கவசம், கையுறை, பேஸ் ஷீல்டு'அணிந்து, சமூக இடைவெளியை கடை பிடித்து பணியாற்ற வேண்டும். மையத்திற்கு வருவோரில் உடல் வெப்பநிலை 98.6 பாரன்ஹீட்டுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் ஓட்டுக்கள் எண்ணும் அறை, ஓட்டு இயந்திரங்கள் வைக்கும் அறைப் பகுதிகளில் பணிபுரியும் 600 போலீசாருக்கு முழுக்கவச உடை வழங்கப்பட்டுள்ளது. முடிவுக்குப்பின் பிரச்னைகளை தவிர்க்க மாவட்டத்தில் 48 இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X