குடிநீரில் கோழி இறைச்சி கழிவுகள் 

Added : மே 02, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி 11-வது வார்டு பூக்காரத்தெருவில் குடிநீரில் கோழி இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி பேரூராட்சி 18 வார்டுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் உள்ளது. குளறுபடியால் ஒரு வாரம் அல்லது 10 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் உள்ளது. நேற்று 11-வது வார்டு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி 11-வது வார்டு பூக்காரத்தெருவில் குடிநீரில் கோழி இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி பேரூராட்சி 18 வார்டுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் உள்ளது. குளறுபடியால் ஒரு வாரம் அல்லது 10 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் உள்ளது. நேற்று 11-வது வார்டு பூக்காரத்தெருவில் 10 நாட்களுக்குப்பின் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீருடன் கோழி இறைச்சிக்கழிவுகள் கலந்து வந்துள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகாரை தொடர்ந்து பேரூராட்சி அலுவலர்கள் இப்பகுதியில் குழாய்கள், மேல்நிலைத்தொட்டிகளை பார்வையிட்டு சென்றுள்ளனர். குழாயில் வந்த நீரை துணியால் வடிகட்டியதில் கோழி இறகுகள், இறைச்சி கழிவுகள் அதிகம் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X