பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5.80 லட்சம் அபராதம்

Added : மே 02, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி: பெரியகுளம் பகுதியில் கொரோனா தடுப்பு விதிமீறி டூவீலரில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2902 பேரிடம் போலீசார் ரூ.5,80,400 அபராதம் வசூலித்தனர்.பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் பகுதிகளில் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணியாமல் டூவீலரில் செல்பவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஏப். 8 முதல் நேற்று மாலை 4:00 மணி வரை, வடகரை

தேவதானப்பட்டி: பெரியகுளம் பகுதியில் கொரோனா தடுப்பு விதிமீறி டூவீலரில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2902 பேரிடம் போலீசார் ரூ.5,80,400 அபராதம் வசூலித்தனர்.பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் பகுதிகளில் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணியாமல் டூவீலரில் செல்பவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஏப். 8 முதல் நேற்று மாலை 4:00 மணி வரை, வடகரை போலீஸ்ஸ்டேஷன் 821 பேர் , தென்கரை போலீஸ்ஸ்டேஷன் 660 பேர், ஜெயமங்கலம் போலீஸ்ஸ்டேஷன் 268 பேர், தேவதானப்பட்டி போலீஸ்ஸ்டேஷன் 768 பேர், போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன் 385 பேர் எனமொத்தம் 2902 பேரிடம் ரூ.5,80,400 அபராதம் வசூலித்து ரசீது வழங்கப்பட்டது. நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.கூடலுார்: கூடலுார் தெற்கு எஸ்.ஐ.,க்கள் பாண்டியராஜன், காளிமுத்து தலைமையிலான போலீசார் மெயின்பஜார், நடுத்தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு, எல்.எப்.ரோடு ஆகிய இடங்களில் ரோந்து சென்றனர். கடைகளில் கொரோனா தடுப்பு முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, அனுமதியில்லாத நேரங்களில் விற்பனை செய்தது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5000 அபராதம் விதித்து வசூலித்தனர். தொடர்ந்து இதனை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X