பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்கு, கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஏப்., 19ம் தேதி, ஆறு நாட்களுக்கு

புதுடில்லி: டில்லியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.latest tamil news


இங்கு, கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஏப்., 19ம் தேதி, ஆறு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின், ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, நாளையுடன் நிறைவடைய இருந்தது.


latest tamil news


இந்நிலையில், டில்லியில் இதுவரை கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. இணையதளம் அறிமுகம்டில்லியில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய மக்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு, பிரத்யேகமாக ஒரு இணையதள பக்கத்தை, டில்லி அரசு நேற்று அறிமுகம் செய்தது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-மே-202107:42:43 IST Report Abuse
சம்பத் குமார் 1). கெஜ்ரிவால் அண்ணா அஸாரி அவர்களின் நிழல் மூலம் முதலமைச்சர் ஆனார்.2). இன்ஜினியரிங் முடித்த எல்லோரும் பேப்பர் என்ஜினியர்ஸ்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதில் ஒரு சிலரே நிஜமாகவே இன்ஜினியர்ஸ் ஆக திகழ்வார்கள்.3). கெஜ்ரிவால் முதலில் ஒரளவு நிர்வாகம் செய்தார்.4). பின்னாளில் திராவிட கலகங்கள் போல் இலவசங்களை அறிவித்து ஆட்சி நடத்தி கொண்டு உள்ளார்.5). இவருக்கு தமிழகத்தின் அரசியல் நண்பர் திரு ஆண்டவர் கமல்ஹாசன் என்பதிலிருந்து அவரது குணாதிசயங்கள் நாம் அறிந்து கொள்ளாமல். நண்பனை காட்டு உன்னை பற்றி சொல்கிறேன் என்பது போல் இது உள்ளது.7). புதுச்சேரி நாராயணசாமி போல் எப்பொழுதும் மத்திய அரசாங்கத்துடன் தொடருந்து விரோத போக்கை கடைப்பிடிப்பவர்.8). இந்த விரோத போக்கு காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தில் இருந்தாலும் இவர் தொடருவார். சிலருக்கு மற்றவரை குறை சொல்வதை பழக்கமாக கொண்டவர்கள். அதில் கெஜ்ரிவால் அடங்குவார்.9). தப்லீக் மற்றும் விவசாய போராட்டக்காரர்கள் ஆகியோரை அனுமதித்து டெல்லி மக்களுக்கு கொரோனோ என்னும் நோயை அறிமுக படுத்திய புண்ணியவான்.10). வாகன பதிவு மாநில அரசாங்கத்தின் கையில் உள்ளது. எத்தனை டேங்கர் லாரிகள் ஒட்டிக்கொண்டு உள்ளன மற்றும் இதர தேவைப்படும் வாகனங்களை டெல்லி மாநில அரசாங்கத்தின் மூலம் எளிதாக கண்டறிந்து ஆக்ஸிஜன் கொண்டு வரலாம்.11). இதை தவிர்த்து மத்திய அரசாங்கத்தை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம். புகழ் வந்தால் தனக்கு கெடுதல் வந்தால் மத்திய அரசாங்கம் என்பதை நியாயப்படுத்த முடியாது.12). கெஜ்ரிவால் முதலில் தரமான நிர்வாகம் செய்ய வேண்டும் இல்லையெனில் பதவி விலகி அவர் கட்சியில் மற்றவருக்கு வழி விட வேண்டும்.13). கொரோனோவை கட்டுப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கடமை. மத்திய அரசாங்கம் மாநில அரசுகளுக்கு உதவி செய்யலாம் உதாரணமாக ஆக்ஸிஜன் மருந்துகள் ஆஸ்பத்திரி மற்ற உதவிகளை மற்ற மாநிலத்திலிருந்து அல்லது வெளி நாடுகளில் இருந்து தருவித்து வழங்கலாம்.14). கெஜ்ரிவால் கொரோனோவை கட்டுபடுத்த தவறி விட்டார். அதனால் தன்னை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசை குறை கூறிக்கொண்டு உள்ளார் என்பதில் ஐயமில்லை.15). கெஜ்ரிவால் டெல்லி என்பது ஒரு national capital Territory என்பதை புரியாத புதுச்சேரி நாராயணசாமி போன்ற படித்த முட்டாள் முதல்வர் என்பதில் ஐயமில்லை. 16). மக்களாகிய நாம் கொரோனோவை ஒன்று சேர்ந்து சுய கட்டுப்பாடுகளுடன் அரசாங்க மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றி கொரோனோவை வெளியேற்றுவோம்.17). கொரோனோ கண்டிப்பாக இன்னும் சில ஆண்டுகள் நம்மிடம் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும். அதை ஒழிக்கும் வரை நாம் ஒற்றுமையாக அதை எதிர்கொள்வோம். நன்றி ஐயா.
Rate this:
02-மே-202110:14:56 IST Report Abuse
sakthi shanmugamஉண்மை ஆனால் தன் கையாலாகதனத்தை மறைக்க மத்திய அரசை குற்றம் சொல்லி தன் தவறு தெரிந்து விடாமல் பார்த்து கொள்கிறார்...
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
02-மே-202102:52:18 IST Report Abuse
skandh Khejriwaalin திறமை அற்ற அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.அப்படியே மகாராஷ்டிரா அரசையும் டிஸ்மிஸ் செய்து திறமை யானவர்களை வைத்து பிரச்சினையை கையாண்டு வெல்லவேண்டும்்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X