சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றால்19 ஆயிரத்து, 588 பேர் பாதிப்பு: 147 பேர் பலி

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால், நேற்று, 19 ஆயிரத்து, 588 பேர் பாதிக்கப்பட்டனர்; 147 பேர் உயிரிழந்தனர். தற்போது, 1.17 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 265 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 1.51 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 19 ஆயிரத்து, 588 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.இவற்றில்,

சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால், நேற்று, 19 ஆயிரத்து, 588 பேர் பாதிக்கப்பட்டனர்; 147 பேர் உயிரிழந்தனர்.

தற்போது, 1.17 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 265 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 1.51 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 19 ஆயிரத்து, 588 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.இவற்றில், சென்னையில், 5,829; செங்கல்பட்டில், 1,445; கோவையில், 1,257; திருநெல்வேலியில், 812; திருவள்ளூரில், 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை, 2.28 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 11 லட்சத்து, 86 ஆயிரத்து, 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், சிகிச்சை முடித்து நேற்று, 17 ஆயிரத்து, 164 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 10 லட்சத்து, 54 ஆயிரத்து, 746 பேர், இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில், 31 ஆயிரத்து, 475; செங்கல்பட்டில், 8,170; கோவையில், 7,288 என, மாநிலம் முழுதும், ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 405 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று, சென்னையில், 47 பேர் உட்பட, 147 பேர் இறந்துள்ளனர். கடந்தாண்டு மார்ச் முதல் நேற்று வரை, 14 ஆயிரத்து, 193 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X