சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஜான் நிக்கல்சன் பலி

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா தொற்றுக்கு, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஜான் நிக்கல்சன் பலியானார்.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் நிக்கல்சன், 68. இவர், தமிழக காவல் துறையில், 1979ல் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். பின், 1987ல், 'குரூப் -- 1' தேர்வு எழுதி, டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தார்.தொடர்ந்து, எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சேலம் மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்தார். மாநில

சென்னை:கொரோனா தொற்றுக்கு, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஜான் நிக்கல்சன் பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் நிக்கல்சன், 68. இவர், தமிழக காவல் துறையில், 1979ல் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். பின், 1987ல், 'குரூப் -- 1' தேர்வு எழுதி, டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தார்.தொடர்ந்து, எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சேலம் மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்தார். மாநில போதை பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த போது, டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றார்.
சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய இவர், 2014ல் ஓய்வு பெற்றார்.இவருக்கு ஏப்., 26ல், உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அதனால், சென்னை கிண்டியில் உள்ள, அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

ஜான் நிக்கல்சன், தமிழக வாள்சண்டை சங்கத்தின் தலைவராக இருந்தார். தி.மு.க.,வில் சேர்ந்த இவர், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். லோக்சபா தேர்தலின்போது, தி.மு.க., வேட்பாளர்களுக்காக பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X