சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.57 லட்சம் தங்கம் பறிமுதல்

Added : மே 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:துபாயில் இருந்து, 'டிவி'க்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட, 57.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்கக் கட்டிகளை, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், நேற்று காலை, 8:25 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, நாகையைச் சேர்ந்த முகமது பதுருதீனின், 23, உடைமைகளை, சுங்கத்துறையினர் சோதனை
 ரூ.57 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:துபாயில் இருந்து, 'டிவி'க்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட, 57.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்கக் கட்டிகளை, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், நேற்று காலை, 8:25 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, நாகையைச் சேர்ந்த முகமது பதுருதீனின், 23, உடைமைகளை, சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, அவர் கொண்டு வந்த, எல்.இ.டி., 'டிவி' வழக்கத்திற்கு மாறாக கனமாக தெரிந்தது. அதை பிரித்து பார்த்த போது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 57.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தங்கம் கடத்திய முகமதுபதுருதீனை கைது செய்து, சுங்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-மே-202115:08:18 IST Report Abuse
தமிழவேல் திருந்த மாட்டீங்களாடா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X