சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சத்தால் ரத்தம் பற்றாக்குறை

Added : மே 02, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்த தானம் செய்வோர் குறைந்துள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு தேவைப்படும் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தில் கல்லுாரி மாணவர்கள் ரெட் கிராஸ் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ரத்த தானம் கழகம் சமூக வலை தள குழுவினர் போன்றவர்கள் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக ரத்தம் வழங்கி சேவை

புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்த தானம் செய்வோர் குறைந்துள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு தேவைப்படும் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கல்லுாரி மாணவர்கள் ரெட் கிராஸ் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ரத்த தானம் கழகம் சமூக வலை தள குழுவினர் போன்றவர்கள் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக ரத்தம் வழங்கி சேவை செய்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்த தானம் செய்வோர் குறைந்துள்ளனர்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாதிப்பில்லாதவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது.பெரும்பாலும் கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம் செய்வார்கள். தற்போது கல்லுாரி விடுமுறையால் மாணவர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை.இது போன்ற காரணங்களால் ரத்த வங்கிகளில் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக ரத்தம் தேவைப்படும் கர்ப்பிணி பெண்கள் விபத்தில் சிக்குவோருக்கு ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தற்போது புதுக்கோட்டை மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.எனவே கல்லுாரி மாணவர்கள் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் ரத்த தானம் செய்வோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்து விட்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு புதுக்கோட்டையில் உள்ள சிவகாமி அம்மாள் ரத்த தான கழகத் தலைவர் மூர்த்தி கோரிக்கை விடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X