சொத்துக்காக கணவன் கொலை: மனைவி சிக்கினார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்காக கணவன் கொலை: மனைவி சிக்கினார்

Added : மே 02, 2021
Share
சென்னை:மாங்காடு அடுத்த கோவூரில் சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியே கணவனை கொடூரமாக கொலை செய்து கல்குவாரி குட்டையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் 37; டிரான்ஸ்போர்ட் நிறுவன அதிபர். இவரது மனைவி உஷா 34. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஊரடங்கு காரணமாக தொழில் நலிவடைந்ததால் கணவன் -- மனைவி இடையே அடிக்கடி

சென்னை:மாங்காடு அடுத்த கோவூரில் சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியே கணவனை கொடூரமாக கொலை செய்து கல்குவாரி குட்டையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் 37; டிரான்ஸ்போர்ட் நிறுவன அதிபர். இவரது மனைவி உஷா 34. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஊரடங்கு காரணமாக தொழில் நலிவடைந்ததால் கணவன் -- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இரு தினங்களாக பாஸ்கர் மாயமானார்.இது குறித்து அவரது தாய் மோகனாம்பாள் பாஸ்கரின் மனைவியிடம் கேட்டபோது சரிவர அவர் பதிலளிக்கவில்லை.

இதனால் மாங்காடு காவல் நிலையத்தில் மோகனாம்பாள் புகார் அளித்தார்.இதன்படி வழக்கு பதிந்த போலீசார் பாஸ்கரை தேடினர். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து சென்ற போலீசார் பாஸ்கர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ரத்த கறை படிந்து இருந்தது.

அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது உஷாவும் அவரது அண்ணன் பாக்கியராஜ் 38 என்பவரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ஒரு சாக்கு மூட்டையை துாக்கி செல்வதும் சற்று நேரம் கழித்து வெறும் கையுடன் வருவதும் போலீசாருக்கு தெரிந்தது.

போலீசார் உஷாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் உஷாவின் அண்ணன் பாக்கியராஜுடன் சேர்ந்து கணவரை கை கால்களை கட்டி அடித்து கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது அங்கு பாஸ்கர் உடல் சாக்கு மூட்டையில் மிதப்பது தெரிந்தது.

பாஸ்கர் உடலை மீட்ட போலீசார் அவரது மனைவி உஷா மற்றும் பாக்கியராஜை கைது செய்தனர்.அவர்கள் இருவரும் பாஸ்கர் பெயரில் உள்ள சொத்துக்களுக்காக அவரை கொலை செய்து நாடகமாடியதாக தெரிவித்தனர். எனினும் சொத்துக்காக தான் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X