பொது செய்தி

இந்தியா

ராணுவ விமானத்தில் வந்த 47 ஆக்சிஜன் 'கன்டெய்னர்'கள்

Added : மே 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து 47 ஆக்சிஜன் 'கன்டெய்னர்'கள் விமானப்படை விமானங்களில் நேற்று டில்லி வந்தன.கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்துள்ளதால் சிகிச்சைக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை ராணுவ அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 'ஆன்லைன்' வாயிலாக நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற டி.ஆர்.டி.ஓ.

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து 47 ஆக்சிஜன் 'கன்டெய்னர்'கள் விமானப்படை விமானங்களில் நேற்று டில்லி வந்தன.

கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்துள்ளதால் சிகிச்சைக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை ராணுவ அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 'ஆன்லைன்' வாயிலாக நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறியதாவது:விமானப்படை சார்பில் 830 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட 47 'கன்டெய்னர்'கள் வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரப்பட்டு உள்ளன. ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 28 ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X