பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் 'சோலார்' இயந்திரங்கள்

Added : மே 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியா சூரிய மின்னாற்றல் வளம் அதிகம் நிறைந்த நாடு. ஆனால், அந்த வளத்தை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. கடந்த பத்தாண்டில், சூரிய மின்னாற்றல் உபயோகித்து, மின்சாரம் தயாரிப்பது என்பது நம் நாட்டில் மிகவும் அதிகமாகி வருகிறது.அது பல வகைகளிலும் தொழில்களுக்கு உதவியாக இருக்கிறது. இதனால், பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருவது

இந்தியா சூரிய மின்னாற்றல் வளம் அதிகம் நிறைந்த நாடு. ஆனால், அந்த வளத்தை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

கடந்த பத்தாண்டில், சூரிய மின்னாற்றல் உபயோகித்து, மின்சாரம் தயாரிப்பது என்பது நம் நாட்டில் மிகவும் அதிகமாகி வருகிறது.அது பல வகைகளிலும் தொழில்களுக்கு உதவியாக இருக்கிறது. இதனால், பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருவது மகிழ்ச்சியான விஷயம். பல 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள், தங்களை இந்த வகை கண்டுபிடிப்புகளில் உட்படுத்தி கொண்டுஉள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான, 'ஸ்டார்ட் அப்' கம்பெனி ஈகோஜென். இந்த கம்பெனி மூன்று தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது.இந்தியாவில் ஆண்டுதோறும், ஏறத்தாழ, 400 கோடி லிட்டர் டீசல், 8.5 கோடி டன் நிலக்கரி, தண்ணீர் இறைப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக, ஒரு பம்ப்செட் என்றால் அடிக்கடி, 'ரிப்பேர்' ஆகி கொண்டு இருக்கும்.ஆனால், இவர்கள் கண்டுபிடித்திருக்கும் பம்புசெட் சூரிய மின் சக்தியால் இயங்குவதால், அதிக செலவில்லாமல், எளிதாக இயக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

இதுதவிர, பேட்டரி சார்ஜிங் ஆப்ஷனும் இதில் உள்ளது.இந்த பேட்டரி மூலம் மற்ற சாதனங்களையும் இயக்க முடிகிறது. நீங்கள் இந்த பம்பு செட்டை துாரத்திலிருந்து மொபைல் போன் மூலமாக கூட இயக்க முடியும். இதனால், ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர் டீசல் மிச்சப்படுத்தப்படுகிறது.சோலார் குளிர்சாதன பெட்டிதோட்டக்கலை மற்றும் மலர் வளர்ப்பில் மிக குறுகிய ஆயுள், விளைபொருட்களின் ஒரு பெரிய பகுதியை சந்தைக்கு வராமல் வீணாகி விடுகிறது.

இந்தியாவில் பழம் மற்றும் காய்கறி உற்பத்தியில், 70 சதவீதம் வீணாகிறது. இதனால், பழம் மற்றும் காய்கறி சந்தைக்கு வரும் போது விலை இருமடங்கு அல்லது அதற்கு மேலாகி விடுகிறது.காய்கறிகளை குறைந்தபட்ச நாட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும் சோலார் மின்சக்தியால் இயங்கும் ஒரு குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்துள்ளனர்.

சிறிய அளவில் இருந்து காய்கறிகளை பாதுகாக்கப்படும் ஒரு அறை முழுவதும்குளிர்சாதன வசதியை சோலார் பவர் மூலம் செய்யும் மாடல்கள் இருக்கின்றன. இதை விலைக்கு வாங்கலாம், வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.இவர்களின் மூன்றாவது தயாரிப்பு, விவசாயிகளையும் விற்பனையாளர்களையும் இணைக்கும் ஒரு செயலி. இதனால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுகின்றனர்.

இந்த செயலி இப்போது பிரபலமாக இருக்கிறது. இதன்மூலம் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

இணையதளம்:www.ecozensolutions.comஇ-மெயில்: info@ecozensolutions.comசந்தேகங்களுக்கு:இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, அலைபேசி: 98204-51259, இணையதளம் www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-மே-202112:27:17 IST Report Abuse
Loganathan Kuttuva Maintenance of solar panel is very important.Solar panel gives DC output.Battery is not required for pumping water from well.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X