மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்

Added : மே 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:''கொரோனா தடுப்பு பணிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை'' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளதாவது:நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவியுள்ளதை பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கற்பனையிலும் தற்புகழ்ச்சியிலும் காலத்தை கழித்து வருகிறது. கொரோனா பரவல்

புதுடில்லி:''கொரோனா தடுப்பு பணிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை'' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளதாவது:நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவியுள்ளதை பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கற்பனையிலும் தற்புகழ்ச்சியிலும் காலத்தை கழித்து வருகிறது.

கொரோனா பரவல் நிலைமை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. கைமீறி போய்விட்டது. தன்னைத் தானே நம்பி இருக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். மக்களுக்கு உதவி செய்ய பிரதமர் வரமாட்டார் என்பது உறுதி.கொரோனா பரவல் குறித்து விஞ்ஞானிகளும் டாக்டர்களும் தொடர்ந்து எச்சரித்து வந்தும் நிலைமையை மத்திய அரசு புரிந்துக் கொள்ளவேயில்லை.

எவ்வித திட்டமிடலும் இன்றி கொரோனா பரவலை சந்தித்து வரும் ஒரே நாடு இந்தியா தான். வைரஸ் பரவல் அதிகரித்து வருவது பற்றி கவலைப்படாமல் நம் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேர்தல் பிரசாரங்களில் ஆர்வம் காட்டினர். கடந்த சில மாதங்களாக முக கவசம் அணிவதையே இருவரும் மறந்து விட்டனர்.நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு பிரதமர் மோடி தான் காரணம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டேன் என தற்பெருமை பேசி வந்த பிரதமர் இப்போது நிலைமை கைமீறி போனதும் மாநில அரசுகளிடம் பொறுப்பைச் சுமத்துகிறார். இது தான் தற்சார்பு இந்தியாவா?காங்கிரசில் உட்கட்சி தேர்தல் அதற்கான நேரத்தில் நடத்தப்படும். கட்சியின் தலைவரை தொண்டர்கள் தேர்வு செய்வர். காங். தலைவர் தேர்தலை விட மக்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் இப்போது முக்கியமான பணி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
02-மே-202107:35:41 IST Report Abuse
kosu moolai கரகிட் தலைவா. மருந்துகளும், ஆக்ஸிஜனனும் அதுவா உற்பத்தி ஆகி அதுவா மக்களுக்கு போட்டுட்டு போகுது. மக்களும் அவங்களாவே குணமாயிடராங்க.மோடி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X