உ. பி., பஞ்சாயத்து தேர்தல் முடிவுக்கு தடையில்லை

Added : மே 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேச மாநில பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு நான்கு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி

புதுடில்லி:உத்தர பிரதேச மாநில பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு நான்கு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி சச்சின் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக கருதி விடுமுறை நாளான நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.உ.பி. பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்போம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதை இந்த அமர்வு ஏற்றுக் கொள்கிறது.அதனால் ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது.

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை தேர்தல் அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதை அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.ஓட்டு எண்ணும் இடத்திற்குச் செல்லும் முன் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை அனைத்து தேர்தல் அலுவலர்களும் காண்பிக்க வேண்டும்.ஓட்டு எண்ணும் பகுதியைச் சுற்றி ஊரடங்கு அமலில் உள்ளதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்த தடை விதிக்கப் படுகிறது. இந்த உத்தரவுகளை மாநில அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X