பொது செய்தி

இந்தியா

ஓட்டு எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேர்

Added : மே 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கான ஓட்டு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பணியில் ஒரு லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் 822

புதுடில்லி:கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கான ஓட்டு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணும் பணியில் ஒரு லட்சம் பேர் ஈடுபட உள்ளனர்.தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் 822 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.இது குறித்து தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது:

கடந்த 2016ல் இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது 1002 இடங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் பாதுகாப்பு நடவடிக்கையாக 2364 இடங்களில் எண்ணப்பட உள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 1113 இடங்களில் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளிட்டோர் தபால் ஓட்டுகள் அளிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 400 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் ஓட்டு எண்ணும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் 822 தேர்தல் அதிகாரிகள், 7000 உதவி தேர்தல் அதிகாரிகள், 95 ஆயிரம் ஊழியர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஓட்டு எண்ணிக்கையை மேற்கொள்வது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நேற்று ஆய்வு செய்தார். தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மாநில தேர்தல் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X