அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி பற்றி தவறான விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., கண்டனம்

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:'தடுப்பூசிகள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து தவறான விமர்சனங்களை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என தமிழக பா.ஜ. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:உலக மக்கள் தொகையில் 7.5 சதவீதமான 58.85 கோடி பேர் கொரோனா தடுப்புக்கான முதல் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 10.6 சதவீதமான 12.38 கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சென்னை:'தடுப்பூசிகள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து தவறான விமர்சனங்களை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என தமிழக பா.ஜ. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:உலக மக்கள் தொகையில் 7.5 சதவீதமான 58.85 கோடி பேர் கொரோனா தடுப்புக்கான முதல் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 10.6 சதவீதமான 12.38 கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்களை விட மிகக் குறைந்த காலத்தில் இந்த இலக்கை எட்டியுள்ளோம்.உற்பத்தி, காலாவதி மற்றும் செலுத்தும் திறனை கணக்கிட்டு எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்னுரிமை என்று வயதின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் விளைவுகள் குறித்து எதையும் சிந்திக்காமல் மக்களின் உணர்ச்சிகளை துாண்டும் விதமாக அனைவருக்கும் உடனே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. மத்திய அரசின் திட்டமிடலை தவிடு பொடியாக்க வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான உள்நோக்க அரசியலால் குழப்பம் உருவானது.

பதட்டத்தை தணிக்கும் வகையில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி தந்தது. அதன் நோக்கம் நிறைவேற மாநில அரசுகளும் தனியார் தடுப்பூசி மையங்களும் தடுப்பூசி பெற்று மக்களுக்கு செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசே தடுப்பூசியை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை வைப்பது முறையல்ல. கொரோனா தடுப்பூசி திட்டத்தை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.மாநில அரசின் சுகாதார கட்டமைப்பு மற்றும் தனியார் பங்களிப்பு இல்லாமல் இதை நிறைவேற்ற முடியாது.

ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தவறான விமர்சனங்களை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் மக்களின் பதட்டத்தை அதிகரிக்க செய்வது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல; மக்கள் விரோத செயலுமாகும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X