பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு ரூபாய் பரோட்டா... அசத்தும் தம்பதி

Added : மே 02, 2021
Share
Advertisement
நாகர்கோவில் வஞ்சி ஆதித்தன் புதுத்தெரு... வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்துள்ள தெரு. இலக்கிய, அரசியல் மேடைகள் களை கட்டும் தெரு. தெருமுனையில் சிவன் கோயிலை ஒட்டி மன்னர் காலம் முதல் இருந்து ராஜபாதை. தெருவின் மற்றொரு மூலையில் புறம் போக்கு இடத்தில் சிறிய தகர கொட்டகையில் ஒரு சிறிய ஓட்டல்... பெயர் 'ஒரு பரோட்டா 2 ரூபாய்'.பெயர் பலகையில்
 இரண்டு ரூபாய் பரோட்டா... அசத்தும் தம்பதி

நாகர்கோவில் வஞ்சி ஆதித்தன் புதுத்தெரு... வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்துள்ள தெரு.

இலக்கிய, அரசியல் மேடைகள் களை கட்டும் தெரு. தெருமுனையில் சிவன் கோயிலை ஒட்டி மன்னர் காலம் முதல் இருந்து ராஜபாதை. தெருவின் மற்றொரு மூலையில் புறம் போக்கு இடத்தில் சிறிய தகர கொட்டகையில் ஒரு சிறிய ஓட்டல்... பெயர் 'ஒரு பரோட்டா 2 ரூபாய்'.

பெயர் பலகையில் மண்டைக்காடு பகவதி அம்மன் படம்... அவர் தேவி பக்தர் என்பதை பறைசாற்றுகிறது. உள்ளே 'ட' வடிவில் 2 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 6பேர் அமரலாம். அவ்வளவுதான் உரிமையாளர் பாலகிருஷ்ணன்... எம்.ஜி.ஆர். ரசிகர். கடை உள்ளே எம்.ஜி.ஆர்., ஜெ., படத்துடன் இரண்டு ரூபாய் பரோட்டா என எழுதி வைத்துள்ளது அதை உறுதி செய்கிறது.

1988 முதல் இந்த கடையை நடத்தி வரும் பாலகிருஷ்ணன், மனைவி லெட்சுமி தான் இதன் அடித்தளம். மதியம் 2:00 மணிக்கு பணி தொடங்குகின்றனர். மாலை 4:00 மணி முதல் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். கணவர் பரோட்டா வீசி சுட்டு எடுக்கிறார். மனைவி வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்கிறார். பரோட்டா, கொத்து பரோட்டா, சிக்கன் பிரை, சிக்கன் பக்கோடா என மற்ற ஓட்டல்களைவிட குறைந்த விலையில் நிறைய வகைகள் இருக்கிறது. வயிறு முட்ட சாப்பிட்டாலும் பில் எகிறாது.

அவர்கள் கூறுகையில்... பரோட்டா 25 காசில் தொடங்கி இப்போது இரண்டு ரூபாய்க்கு விற்கிறோம். சிரமம்தான். பரோட்டாவில் பெரிய லாபம் இல்லை. சிக்கன், முட்டை அயிட்டங்கள் விற்றால் கொஞ்சம் லாபம் கிடைக்கும்.வருகிறவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டு போகிறார்கள். பள்ளிக்கூட பிள்ளைகள் பத்து ரூபாய்க்கு ஐந்து பரோட்டா வாங்கி சாப்பிட்டு சந்தோஷமாக செல்வதை பார்க்கும் எங்கள் மனம் நிறைகிறது. அன்றாட செலவு ஓடும். மிச்சம் எதுவும் இல்லை. உடம்பு சரியில்லாமல் போனால் உறவினர்கள்உதவுகின்றனர். அவர்கள் அடிக்கடி ரேட் ஏற்ற சொல்கிறார்கள். எங்களுக்கு மனம் இல்லை.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லெட்சுமியின் பேச்சால் கவரப்பட்டவர்கள் தினசரி ஏராளம் பேர் வருகின்றனர். செல்பி எடுக்கின்றனர். சாப்பிடுகின்றனர். பார்சல் வாங்குகின்றனர். இதனால் இருவரும் ஏக பிசியாகி விட்டனர்.விலைவாசி உயர்வு என்று சொல்லி அடிக்கடி கட்டணத்தை உயர்த்தும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் '2 ரூபாய் பரோட்டா கடை' 11 ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் பெயரை கேட்டோம். லெட்சுமி என்று துடுக்காக கூறிய அவர், பழங்கால பாணியில் கணவர் பெயரை சொல்ல தயங்கினார். 'ஏங்க உங்க பெயர் சொல்லுங்க' என்று கணவரிடம் சொல்ல அவர் 'பாலகிருஷ்ணன்' என்றார். குழந்தைகள் இல்லை என்றாலும் அவர்கள் அன்பில் எந்த குறைவும் இல்லை என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது.இவர்களை பாராட்ட 96002 77216

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X