பொது செய்தி

தமிழ்நாடு

கடல் வேட்டைக்கு

Added : மே 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆமைகள், அலையாத்தி காடுகளை பாதுகாத்து கடல் அட்டைகள், கடல் குதிரைகள் வேட்டையாடுவதை தடுத்ததற்காக தமிழக வனத்துறையின் ராமநாதபுரம் ரேஞ்சர் சதீஷ்க்கு 'சர்வதேச ரேஞ்சர்' விருதை சுவிட்சர்லாந்து அமைப்பு வழங்கியது.சுவிட்சர்லாந்தின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் முதன்முறையாக 10 பேருக்கு சர்வதேச ரேஞ்சர் விருது வழங்கியது. ரேஞ்சர் சதீஷ் பெயரை டேராடூனில் உள்ள இந்திய
 கடல்  வேட்டைக்கு

ஆமைகள், அலையாத்தி காடுகளை பாதுகாத்து கடல் அட்டைகள், கடல் குதிரைகள் வேட்டையாடுவதை தடுத்ததற்காக தமிழக வனத்துறையின் ராமநாதபுரம் ரேஞ்சர் சதீஷ்க்கு 'சர்வதேச ரேஞ்சர்' விருதை சுவிட்சர்லாந்து அமைப்பு வழங்கியது.

சுவிட்சர்லாந்தின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் முதன்முறையாக 10 பேருக்கு சர்வதேச ரேஞ்சர் விருது வழங்கியது. ரேஞ்சர் சதீஷ் பெயரை டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின நிறுவன விஞ்ஞானி சிவக்குமார் பரிந்துரை செய்துள்ளார். விருது பெற்றது குறித்து சதீஷ் கூறியதாவது:

கடல், கடல்தீவுகள், அலையாத்தி காடுகள், பறவைகள் சரணாலயம் தான் எங்கள் எல்லை. எதை தடை செய்கின்றோமோ அதை சாப்பிட விரும்புவது மனிதர்களின் குணமாகி விட்டது. இதனால் கடல் அட்டைகள், ஆமைகள், சரணாலயத்திற்கு வரும் உள்ளூர், வெளிநாட்டு பறவைகள் வேட்டையாடப்படுகின்றன. கடல் அட்டைகளை கடல் நீரோடு சேர்த்து எடுப்பதால் 4 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.

இது தொடர்பாக 70 வழக்கு போட்டு 100 பேரை ரிமாண்ட் செய்தேன். கடல் பறவைகள் தொடர்பாக 40 வழக்குகள் போட்டுள்ளேன். சில நேரங்களில் கூட்டத்திற்குள் நாங்கள் மாட்டிக் கொண்டால் பொருட்களை பறிமுதல் செய்ய விடாமல் முற்றுகை செய்வர். இதை தாண்டி கடல் அட்டைகளை உயிருடன் மீட்டு கடலில் விட்டு சாதித்துள்ளோம்.அலையாத்தி காடுகள் அழிந்து போன தடங்களில் புதிதாக விதை நடவு செய்தோம். துார்ந்து போன பகுதியில் மறுநடவு செய்வதன் மூலம் புதிதாக 100 ஏக்கரில் அலையாத்தி காடுகள் உருவாக்க முடிந்தது.

மண்டபம் வனச்சரகராக இருந்தபோது ஆண்டுதோறும் சித்தாமை முட்டைகளை சேகரித்து வைத்தோம். 40 - 50 நாட்கள் தனியாக எடுத்து பாதுகாத்து குஞ்சு பொறித்தவுடன் கடலில் விட்டுள்ளோம். இதுவரை 40ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விட்டது மனதுக்கு நிறைவாக இருந்தது.ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கிறது. ஸ்கூபா டைவிங் மூலம் கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தபோது வலையில் மாட்டிய ஆமைகளையும் பவளப்பாறைகளின் மேல் படிந்துள்ள பிளாஸ்டிக் கவர்களையும் அகற்றிஉள்ளோம்.

ஐந்தாண்டுகளாக தொடர் விழிப்புணர்வின் மூலம் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். படகுகளில் மீனவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றாலும் பிளாஸ்டிக் பாக்கெட் களை கடலில் வீசாமல் மீண்டும் கரைக்கு கொண்டு வருகின்றனர். முன்பு வலைக்குள் ஆமைகள் சிக்கினால் அதன் துடுப்பை வெட்டி கடலில் வீசி விடுவர். இப்போது வலையை கிழித்து ஆமைகளை கடலில் விடுகின்றனர். ஆமைகள் இருந்தால் சொரிமீன்களை (ஜெல்லி) சாப்பிட்டு அவற்றை கட்டுப்படுத்தும். கடற்பசுக்களையும் கடலில் விடுகின்றனர். இவை கடற்புற்களை முட்டி சாப்பிடும் போது விதைகள் விழுந்து முளைத்து மீன்வளம் பெருகும். இது சந்தோஷமான மாற்றம்.

மீனவர்களுக்கு சொல்லும் ஒரே விஷயம். மிகச்சிறிய வலைகளை பயன்படுத்தி குட்டி மீன்கள் பிடித்து வீணாக்குவதை விட அவற்றை விடுவித்து 3 மாதங்கள் கழித்து பிடிக்கலாம். கடல் மனிதர்களுக்கு மட்டுமல்ல... மற்ற உயிரினங்களுக்கும் பொதுவானது. அவற்றை வாழ வைப்பதே கடலுக்கும் இயற்கைக்கும் நாம் செய்யும் மரியாதை என்றார்.'சேவ் தி ஸ்பீசிஸ்' என்ற பிரிவின் கீழ் சதீஷ் சீருடையில் அணிந்து கொள்ள பிரத்யேக பேட்ஜ், வனத்துறை மேம்பாட்டுக்காக ரூ. 7.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவரிடம் பேசsssjune22@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santi -  ( Posted via: Dinamalar Android App )
02-மே-202103:42:37 IST Report Abuse
Santi உங்களுக்கு ஒரு சபாஷ்!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X