கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் சொத்துக்களை தணிக்கை செய்ய வழக்கு

Added : மே 02, 2021
Share
Advertisement
மதுரை:அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் சொத்துக்களை வெளித் தணிக்கைக்கு உட்படுத்த தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்தது. கோவை ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் சார்பில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பவர் ஏஜன்ட் தினேஷ் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக கோயில்கள் நம் பாரம்பரியம், கட்டடக்கலை, ஓவியம், இசை, நடனக் கலையின் பெருமைக்கு

மதுரை:அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் சொத்துக்களை வெளித் தணிக்கைக்கு உட்படுத்த தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்தது.

கோவை ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் சார்பில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பவர் ஏஜன்ட் தினேஷ் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக கோயில்கள் நம் பாரம்பரியம், கட்டடக்கலை, ஓவியம், இசை, நடனக் கலையின் பெருமைக்கு முன்னுதாரணமாக உள்ளன. தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் கோபுரம் இடம் பெற்றுள்ளது.

தமிழக அறநிலையத்துறையின் கீழ் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளன. இவற்றில் 37 ஆயிரம் கோயில்களுக்கு போதிய வருவாய் இல்லை. 11 ஆயிரத்து 999 கோயில்களில் ஒரு கால பூஜை கூட மேற்கொள்ள முடியவில்லை. 34 ஆயிரத்து 99 கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் தான் வருவாய் கிடைக்கிறது. 331 கோயில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

அரசியல் சட்டப்படி எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் மக்களுக்கு உள்ளது. மதம் சார்ந்த விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. அனைத்து மதங்கள் , நம்பிக்கைகளை சமமாக பார்க்க வேண்டும்; பாகுபாடு கூடாது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் கட்டடங்கள், சொந்தமான நிலம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், அவை யார், யார் வசம் உள்ளன, தற்போதைய நிலை, அவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை மற்றும் நிலுவை, பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் தொகை, வரவு - செலவுகளை வெளித் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் நிதியை கையாள்வதில் தவறுகளை வெளிக்கொணர முடியும்.

கோயில் சொத்துக்கள், ஆண்டு வருவாய் விபரங்களை வெளியிட வேண்டும். நிபுணர்கள், சான்றோர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் அடங்கிய கமிஷன் அமைக்க வேண்டும். கோயில் நிர்வாகம், சடங்கு சம்பிரதாயங்களை முறையாக கடைபிடிக்க வழிவகை செய்ய வேண்டும். கோயில் நிர்வாகப் பொறுப்பை சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர், அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தினேஷ்ராஜா குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு ஜூன் 1 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X