பொது செய்தி

தமிழ்நாடு

பாண்டியார் - புன்னம்புழா திட்டம் செயற்கை கோள் 'சர்வே' துவக்கம்

Added : மே 02, 2021
Share
Advertisement
கூடலுார்:பாண்டியார் - புன்னம்புழா திட்ட சாத்தியக்கூறுகள் தொடர்பாக, பொதுப்பணித்துறை சார்பில், 'சர்வே' பணி துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார் - புன்னம்புழா ஆறு, கேரளா மாநிலம் சாலியாற்றில் கலந்து, அரபிக்கடலில் சென்று வீணாகிறது. இந்த, ஆற்றுநீரை, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில், 1965ல் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்
 பாண்டியார் - புன்னம்புழா திட்டம்  செயற்கை கோள் 'சர்வே' துவக்கம்

கூடலுார்:பாண்டியார் - புன்னம்புழா திட்ட சாத்தியக்கூறுகள் தொடர்பாக, பொதுப்பணித்துறை சார்பில், 'சர்வே' பணி துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார் - புன்னம்புழா ஆறு, கேரளா மாநிலம் சாலியாற்றில் கலந்து, அரபிக்கடலில் சென்று வீணாகிறது. இந்த, ஆற்றுநீரை, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில், 1965ல் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக, கேரளா - -தமிழ்நாடு இடையே பலகட்ட பேச்சு நடந்ததும், முடிவு எட்டப்படவில்லை.

தற்போது, இத்திட்டம் தொடர்பாக, இரு மாநிலங்கள் இடையே சாதகமான சூழல் உருவாகி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், பாண்டியார் - புன்னம்புழா ஆற்றுப்பகுதியில், செயற்கைக் கோள் உதவியுடன் 'சர்வே' பணி இரண்டு நாட்கள் நடந்தது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பாண்டியார் - புன்னம்புழா திட்டம் தொடர்பாக, தொழில்நுட்பம், நீரியல் விபரங்கள், பொருளாதார சாத்திய கூறுகள் தொடர்பாக, ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

நாடுகாணி அருகே புன்னம்புழா ஆறு, மரப்பாலம் அருகே பாண்டியார் ஆறு, சேரம்பாடி சோலாடி ஆறு, தொரப்பள்ளி அருகே மாயாறு பகுதிகளில் சர்வே பணிகள் நடந்தது. இதன் விபரம் அரசிடம் சமர்பிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X