இது உங்கள் இடம்: இப்போது கொள்ளை அடிக்கலாமா?

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கொரோனா கொடுந்தொற்று தமிழகத்தைக் கதிகலங்கச் செய்யும் நிலையில், சில தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடு, அருவருப்பை வரவழைக்கிறது.தமிழகத்தில், சென்னைக்கு அடுத்த பெருந்தொழில் நகரமாக விளங்குவது, கோயம்புத்துார்.
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கொரோனா கொடுந்தொற்று தமிழகத்தைக் கதிகலங்கச் செய்யும் நிலையில், சில தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடு, அருவருப்பை வரவழைக்கிறது.

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்த பெருந்தொழில் நகரமாக விளங்குவது, கோயம்புத்துார். கொரோனாவுக்குச் சிகிச்சை அளிக்க, 6,000 ரூபாய் முதல், 6 லட்சம் ரூபாய் வரை, கோயம்புத்துாரில் உள்ள சில மருத்துவமனைகள் வசூலிப்பதாக வரும் செய்திகள், மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் வரவழைக்கின்றன.

மருத்துவமனையின் தரத்திற்கேற்ப, நோயாளிகளிடம் பணத்தை கறந்து விடுகின்றனராம்.கொரோனா காலத்தில், தங்கள் உயிரை துச்சமாக மதித்து, மக்கள் சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்களையும், மருத்துவர்களையும், தெய்வங்களாக எண்ணி போற்றுகிறோம்.இந்நிலையில், மருத்துவமனையில் நடக்கும் கொள்ளை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சில தனியார் மருத்துவமனைகளின் உள்ளேயே, நகை அடகு வைப்பதற்கான கடைகளும் திறக்கப்பட்டுள்ளனவாம்.கையில் பணமின்றி, அவசரச் சிகிச்சை பெற வரும் மக்களின் கழுத்தில், காதில் போட்டிருப்பதையும் அபகரித்துக் கொள்ளும், இந்த மருத்துவமனைகளை என்னவென்று சொல்வது?


latest tamil news


கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வயிற்றுப்பாட்டிற்கே பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.அவர்களிடம் இரக்கமும், கருணையும் காட்டி, அன்பு இல்லமாக செயல்பட வேண்டிய மருத்துவமனைகள் இப்படி, 'அமீனா'க்களாகி, 'எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்' என்ற மனோபாவத்துடன் செயல்படுவது, எந்த விதத்திலும் நியாயமே இல்லை.கொரோனா என்பது பேரிடர். இதிலும், பணம் பார்க்க எண்ணும் சில மருத்துவமனைகளின் நிர்வாகத்தை, சாக்கடையோடு ஒப்பிட்டாலும் தவறில்லை.தனியார் மருத்துவமனைகள் மீதும், அரசு தீவிர கண்காணிப்பை செலுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் மருத்துவமனைக்கு, 'பூட்டு' போட வேண்டும்!

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samaniyan - Chennai ,இந்தியா
02-மே-202120:56:34 IST Report Abuse
Samaniyan Now that DMK has won , they have an Avenue to make money. People will have to take care of themselves.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
02-மே-202118:56:16 IST Report Abuse
தத்வமசி நாங்க அப்படிதாங்க. காசு கொடுத்தால் ஓட்டு போடுவோம். இலவசம் கொடுத்தால் நல்ல ஆட்சி என்போம். மக்கள் எவ்வழி மற்றவரும் அவ்வழி...
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
03-மே-202101:15:31 IST Report Abuse
VIDHURANஉண்மைதான் அவரவருக்கு தகுதியான அரசு தான் அமையும்....
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
02-மே-202115:32:27 IST Report Abuse
bal முன் போன்று பெரிய ஆபரேஷன் கிடையாது...வெறுமனே ஆஸ்பத்திரியில் பதினாலு நாட்கள் வைத்து இன்ஜெக்ஷன், உணவு, மருந்து...இதற்கு நாலைந்து லட்சம்..பின்னர் ஏன் இதற்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார்கள்..நோவாம நொங்கெடுப்பது நம் மருத்துவமனைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X