பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கில் ஓட்டு எண்ணிக்கை கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Added : மே 02, 2021
Share
Advertisement
கோவை:ஓட்டு எண்ணிக்கை மற்றும் முழு ஊரடங்கு காரணமாக, கோவையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை,கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லுாரியில் இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாநகரில், 800 போலீசார் என, 1,600

கோவை:ஓட்டு எண்ணிக்கை மற்றும் முழு ஊரடங்கு காரணமாக, கோவையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை,கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லுாரியில் இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாநகரில், 800 போலீசார் என, 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுதவிர, புறநகர் பகுதியில், 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் வேட்பாளர்கள், முகவர்கள், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள், அலுவலர்கள், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர, பிற காரணங்களுக்காக ரோட்டில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் கூறுகையில், 'ஊரடங்கு விதிமுறையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிமீறி யாரும் வெளியே செல்லக் கூடாது. ஓட்டு எண்ணிக்கை முன்னணி விவரங்கள் தெரியும்போதுசில இடங்களில் கூட்டம் சேர வாய்ப்புள்ளதால் அதை தடுக்கரோந்து போலீசார், கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவர்; வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X