இந்தியாவுக்கு உதவியை அதிகரிக்க ஐ.நா., வாக்குறுதி

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நியூயார்க்: இந்தியாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா இரண்டாவது அலையை ஒழிக்க, அந்நாட்டுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அதிகரிக்க தயாராக இருப்பதாக, ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார்.ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டரெஸ் கூறியதாவது; கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து உள்ள இந்த சோதனை மிகுந்த காலத்தில், இந்திய மக்களுக்கு ஆதரவாக, ஐ.நா., துணை

நியூயார்க்: இந்தியாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா இரண்டாவது அலையை ஒழிக்க, அந்நாட்டுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அதிகரிக்க தயாராக இருப்பதாக, ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார்.



latest tamil news


ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டரெஸ் கூறியதாவது; கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து உள்ள இந்த சோதனை மிகுந்த காலத்தில், இந்திய மக்களுக்கு ஆதரவாக, ஐ.நா., துணை நிற்கிறது. இந்தியாவுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அதிகரிக்க, ஐ.நா., தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கு, இந்தியாவுக்கான ஐ.நா., நிரந்தர பிரதி நிதி, டி.எஸ்.திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.


latest tamil news


ஐ.நா., பொதுச் சபையின் தலைவர் வோல்கன் பாஸ்கிர் கூறுகையில், ''அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி அளித்து உதவிய இந்தியாவில், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த நேரத்தில், அனைத்து நாடுகளும், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
02-மே-202111:59:47 IST Report Abuse
J. G. Muthuraj நாட்டின் வளங்களை எப்படி சமூக மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் உருவாக்குவது என்ற சிந்தனையும், செயல் நோக்கமும் நம்மிடத்தில் இல்லை.....ஜாதி, மதம், ஊழல் இவைகள் நமது கழுத்தில் தொங்கும் பாறைக்கற்கள்.....அதனால் தான் பிறரை சார்ந்திருக்கும் நாடாகவே பரிணமிக்கிறோம்.
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
02-மே-202103:49:57 IST Report Abuse
Shroog இந்திய பிரதமருக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். முட்டாள்தனமான கும்ப மேளாவுக்கு அனுமதி கொடுத்த தலைவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும். டி போட்டவர்களை ஆட்சி செய்ய வைத்தால் இது தான் நடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X