ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள்

Added : மே 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : ஒரே பதிவு எண் கொண்ட, இரண்டு டெம்போ டிராவலர்ஸ் வாகனங்களை, அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். மெஜஸ்டிக்கில் அதிகாரிகளை கண்டு, பீதியடைந்த ஓட்டுனர் வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினார்.போக்குவரத்துக்கழக ஊழியர்கள், போராட்டம் நடத்திய போது, ஹாசன் ---- பெங்களூரு பாதையில், கேஏ - 13 பி 3567 எண் கொண்ட டெம்போ டிராவலர் இயங்கியது. இதே பதிவு எண் கொண்ட, மற்றொரு வாகனம், ராம்நகர்

பெங்களூரு : ஒரே பதிவு எண் கொண்ட, இரண்டு டெம்போ டிராவலர்ஸ் வாகனங்களை, அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

மெஜஸ்டிக்கில் அதிகாரிகளை கண்டு, பீதியடைந்த ஓட்டுனர் வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடினார்.போக்குவரத்துக்கழக ஊழியர்கள், போராட்டம் நடத்திய போது, ஹாசன் ---- பெங்களூரு பாதையில், கேஏ - 13 பி 3567 எண் கொண்ட டெம்போ டிராவலர் இயங்கியது. இதே பதிவு எண் கொண்ட, மற்றொரு வாகனம், ராம்நகர் சென்னப்பட்டணாவில் உள்ளது.இதுபற்றி, போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது. அந்த வாகனத்தின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.இந்நிலையில், நேற்று முன் தினம், மெஜஸ்டிக்கில் அந்த வாகனத்தை கண்ட, அதிகாரிகள், தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டனர்.
ஆனால், ஓட்டுனர் இறங்கி ஓடிவிட்டார். வாகனத்தை அதிகாரிகள், பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.டெம்போ டிராவலர் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமானது. போலி நம்பர் பிளேட் பொருத்தி, இயக்கி வந்துள்ளார். அவரை அதிகாரிகள் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X