பொது செய்தி

இந்தியா

கொரோனா குறிதது வதந்தி

Added : மே 02, 2021
Share
Advertisement
ஹாவேரி : கொரோனா சிகிச்சை குறித்து, கிராமங்களில் வதந்தி பரவியுள்ளது. ஹாவேரியின் கிராமம் ஒன்றில், கொரோனா நோயாளியொருவர், ஆம்புலன்சை கண்டு ஓட்டம் பிடித்தார்.கொரோனா தொற்றுக்கு, மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. நோயாளி இறப்பதாக, கிராமங்களில் வதந்தி பரவியுள்ளது. இதனால், கிராமத்தினர் மருத்துவமனைகளுக்கு செல்ல தயங்குகின்றனர்.ஹாவேரி மாவட்டத்தின்,

ஹாவேரி : கொரோனா சிகிச்சை குறித்து, கிராமங்களில் வதந்தி பரவியுள்ளது. ஹாவேரியின் கிராமம் ஒன்றில், கொரோனா நோயாளியொருவர், ஆம்புலன்சை கண்டு ஓட்டம் பிடித்தார்.கொரோனா தொற்றுக்கு, மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. நோயாளி இறப்பதாக, கிராமங்களில் வதந்தி பரவியுள்ளது.

இதனால், கிராமத்தினர் மருத்துவமனைகளுக்கு செல்ல தயங்குகின்றனர்.ஹாவேரி மாவட்டத்தின், பழங்குடியினர் கிராமம் ஒன்றில், 50 வயது நபருக்கு, இரண்டு நாட்களுக்கு முன், கொரோனா தொற்று ஏற்பட்டது.தகவலறிந்த சுகாதார அதிகாரிகள், அந்நபரை மருத்துவ மனைக்கு அழைத்து வர, ஆம்புலன்சில் சென்றனர். தொலைவில் வரும் போதே, ஆம்புலன்சை பார்த்த அந்நபர், வீட்டின் பின் வாசல் வழியாக, ஓட்டம் பிடித்தார்.அந்நபருக்காக வீட்டின் அருகில், அதிகாரிகள் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும், அவர் வரவேயில்லை.

அதன்பின்னரே, அவர் தப்பியோடியது தெரிந்தது.இவ்விஷயம், கிராமம் முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. கிராமத்தினர் தங்கள் வீட்டு கதவை தாழிட்டுக்கொண்டனர்.அதிகாரிகள், கொரோனா நபரின் குடும்பத்தினருடன் பேசி, அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுறுத்தினர். அதன்பின் நபரை தேடிய போது, வேறொரு கிராமம் அருகில் இருக்கும் தகவல் தெரிந்தது.மறுநாள், அந்நபர் கிராமத்துக்கு திரும்பினார். மருத்துவமனையில் சேர சம்மதித்த பின், ஆம்புலன்ஸ் மூலம், மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, சிகிச்சை பெறுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X