பாக்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவருக்கு பெங்களூருவில் சிறை

Added : மே 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, ரசாயன பொறியாளர் ஒருவருக்கு, பெங்களூரின் சிட்டி சிவில் நீதிமன்றம், சிறை தண்டனை விதித்தது. பாகிஸ்தான் கராச்சி, நிஜாமாஹாத்தை சேர்ந்த பஹாத் என்ற நடுதானி என்ற முகமது கோயா என்பவர், மைசூரின் ராஜிவ் நகரில் வசித்து வந்தார்.ரசாயன பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர், இந்தியாவில் குண்டு வெடிப்பு நடத்த, சதித்திட்டம் தீட்டிய,

பெங்களூரு : பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, ரசாயன பொறியாளர் ஒருவருக்கு, பெங்களூரின் சிட்டி சிவில் நீதிமன்றம், சிறை தண்டனை விதித்தது.

பாகிஸ்தான் கராச்சி, நிஜாமாஹாத்தை சேர்ந்த பஹாத் என்ற நடுதானி என்ற முகமது கோயா என்பவர், மைசூரின் ராஜிவ் நகரில் வசித்து வந்தார்.ரசாயன பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர், இந்தியாவில் குண்டு வெடிப்பு நடத்த, சதித்திட்டம் தீட்டிய, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினருக்கு, ரகசியமாக உதவி செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மைசூரில் ராஜிவ் நகரின் அவரது வீட்டில், போலீசார் சோதனையிட்டனர்.

பாகிஸ்தான் பாஸ்போர்ட், பலவிதமான ரசாயனம், பிளாஸ்டிக் கேப்ஸ், 90 குண்டுகள், ஏகே 47 துப்பாக்கி, மேக்கிங் கெமிக்கல்ஸ் எக்ஸ்ப்ளோசிவ் டீடெய்ல்ஸ் என எழுதப்பட்ட, 30 சிடிக்கள் கிடைத்தது.இதுமட்டுமின்றி, ஒசாமா பின்லேடன் போட்டோ இருந்த புத்தகமும், கண்டுப் பிடிக்கப் பட்டது.அதன்பின் போலீசார், 2006 அக்டோபரில் முகமது கோயாவை கைது செய்தனர். போலீசாரை தாக்கிய குற்றச்சாட்டும் அவர் மீதுள்ளது. அப்போது அவரது வயது 24.பெங்களூரின் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சாட்சிகள், ஆதாரங்களை சேகரித்து தாக்கல் செய்திருந்தனர்.

விசாரணையில், முகமது கோயா குற்றம் உறுதியானது. இந்தியாவுக்கு எதிராக, சதி செய்ததற்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; இரண்டு ஆண்டுகள் சாதாரண தண்டனை, 2,000 ரூபாய் அபராதம்; அரசு ஊழியர்களின் கடமையில் குறுக்கிட்டதற்காக, ஓராண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம்; சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக, ஏழு ஆண்டு சிறை தண்டனை, 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X