டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தாதீர்கள்

Added : மே 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கொரோனா நோயாளிகளின் இயலாமையை, தவறாக பயன்படுத்தி, டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தாதீர்கள்,'' என பெரிய தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவுறுத்தினார். ஹூப்பள்ளியில் அவர், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை கட்டணத்தை செலுத்த முடியாமல்

பெங்களூரு : ''கொரோனா நோயாளிகளின் இயலாமையை, தவறாக பயன்படுத்தி, டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தாதீர்கள்,'' என பெரிய தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவுறுத்தினார்.

ஹூப்பள்ளியில் அவர், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவர்களின் வசதிக்காக, இலவச சிகிச்சை உட்பட, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த, கட்டணத்தை விட, அதிக கட்டணம் செலுத்தும்படி, நோயாளிகளின் குடும்பத்தினருக்கு, நெருக்கடி கொடுக்கின்றன.கொரோனா நோயாளிகளின் இயலாமையை, தனியார் மருத்துவமனைகள், தவறாக பயன்படுத்தக்கூடாது.

தற்போதைய கடுமையான சூழ்நிலையில், டாக்டர்கள், ஏழை, எளியவருக்கு உதவியாக செயல்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து,டாக்டர் தொழில் மீதான கவுரவத்தை, அதிகரிக்க வேண்டும். டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X