கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொலையில் 3 பேர் கைது

Added : மே 02, 2021
Share
Advertisement
தங்கவயல் : கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொலையில், 'மாஜி' பெண் ஊழியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ராபர்ட்சன்பேட்டை ராகவேந்திரா சுவாமி கோவில் அருகே, முகுந்தன், 27, என்பவர், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவர் வழக்கம் போல், ஏப்., 28 ல், இரவு, 7:30 மணிக்கு, கம்ப்யூட்டர் சென்டரை பூட்டி விட்டு, வீட்டுக்கு செல்ல தயாரானார்.அப்போது, அங்கு வந்த, மர்ம நபர்கள்

தங்கவயல் : கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொலையில், 'மாஜி' பெண் ஊழியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ராபர்ட்சன்பேட்டை ராகவேந்திரா சுவாமி கோவில் அருகே, முகுந்தன், 27, என்பவர், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவர் வழக்கம் போல், ஏப்., 28 ல், இரவு, 7:30 மணிக்கு, கம்ப்யூட்டர் சென்டரை பூட்டி விட்டு, வீட்டுக்கு செல்ல தயாரானார்.அப்போது, அங்கு வந்த, மர்ம நபர்கள் முகுந்தனை கொடூரமாக வெட்டி விட்டு தலைமறைவாகினர்.அக்கம் பக்கத்தில் இருந்தோர், மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், 'முகுந்தன் நடத்திய கம்ப்யூட்டர் சென்டரில், ராபர்ட்சன்பேட்டை பைப் லைன் பகுதியை சேர்ந்த அஸ்வதி, 25, மேலாளராக பணியாற்றினார்.

அவரை திருமணம் செய்ய கொள்ள விரும்பி, முகுந்தன், தன் விருப்பத்தை தெரிவித்தார். இந்நிலையில், அஸ்வதி வேலையில் இருந்து விலகினார். ஆயினும் முகுந்தன் தொலைபேசியில், தொடர்ந்து பேசி வந்தார்.இது குறித்து, பைப் லைனில் வசித்து வரும் தன் காதலர் ராஜேந்திர பிரசாத், 35, திடம், அஸ்வதி தெரிவித்துள்ளார்.முகுந்தனை தீர்த்து கட்டினால் தான், பிரச்னை தீரும் என இருவரும் முடிவு செய்தனர்.தங்களுக்கு உதவியாக, சாம்பியன் ரீப், 'டி' பிளாக் பகுதியில் வசித்து வரும், மெல்வின், 26., என்பவரையும் சேர்த்து கொண்டனர்.

மூவரும் திட்டமிட்டு, ஏப்., 28, இரவு, 7:30 மணிக்கு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று, முகுந்தனை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாகினர்,' என்பது தெரிய வந்தது.அஸ்வதி, ராஜேந்திர பிரசாத், மெல்வின் ஆகிய மூன்று பேரையும், தங்கவயல் போலீசார், நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X