கொரோனாவால் இறந்தவர்களை திறந்தவெளியில் எரிக்க எதிர்ப்பு

Added : மே 02, 2021
Share
Advertisement
மாவள்ளி : கொரோனாவால் இறந்தவர்களின் உடலை, தங்கள் பகுதியில், திறந்த வெளியில் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கொரோனா இரண்டாவது அலையால், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மாநகராட்சி மின் மயானங்களில், உடலை ஆம்புலன்சில் வைத்து கொண்டு, அவரது உறவினர்கள், நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.இதை தவிர்க்கும், வகையில், நகர் மற்றும்

மாவள்ளி : கொரோனாவால் இறந்தவர்களின் உடலை, தங்கள் பகுதியில், திறந்த வெளியில் எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

கொரோனா இரண்டாவது அலையால், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மாநகராட்சி மின் மயானங்களில், உடலை ஆம்புலன்சில் வைத்து கொண்டு, அவரது உறவினர்கள், நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.இதை தவிர்க்கும், வகையில், நகர் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில், தற்காலிக இடுகாடு அமைக்க அரசு திட்டமிட்டது.இதையடுத்து, பெங்களூரிலிருந்து, 27 கிலோ மீட்டர் துாரத்திலுள்ள, மாவள்ளியில், 2.5 ஏக்கர் அரசு நிலத்தில், திறந்தவெளி இடுகாடு அமைப்பது தொடர்பாக, ஏப்., 28 ல் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர்.

இதையறிந்த அப்பகுதியினர், அங்கு வந்து அதிகாரிகளிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.அப்பகுதியை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் கூறியதாவது: இறந்தவர்களின் உடலை, விறகு மூலம் எரிக்க மாநகராட்சி திட்டமிட்டிருப்பது, விஞ்ஞானமற்ற செயல்.அதேபோன்று, உடலை கொண்டு வரும் உறவினர்கள் அணிந்திருக்கும் முழு பாதுகாப்பு கவச உடை, மருத்துவ கழிவுகளை அழிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என கேட்டோம், அதற்கு அவர்களிடம் பதில்லை.

இத்திட்டத்தை கைவிடும் வரை, போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக, சுற்றுச்சூழல் ஆதரவு குழுவினர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அதில், 'மாநகராட்சியின் இத்திட்டம் அதிர்ச்சியளிக்கிறது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காத வகையில், நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.2012ல், 20 ஆண்டுகளாக, நகரில் உருவாகும் குப்பைகள், மாவள்ளிபுராவில் கொட்டியதில், அப்பகுதியை சேர்ந்த, 45 பேர், புற்றுநோய், சிறுநீரகம் பாதிப்பு, இதய நோயால் இறந்துள்ளனர்.எனவே, இந்த நிலத்தில் இறந்தவர்களின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X