மகன் பிறந்தும் வீட்டிற்கு செலலாத கொரோனா சிகிச்சையளிக்கும் டாக்டருக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மகன் பிறந்தும் வீட்டிற்கு செலலாத கொரோனா சிகிச்சையளிக்கும் டாக்டருக்கு பாராட்டு

Added : மே 02, 2021
Share
கொப்பால் : மகன் பிறந்து ஒரு மாதமாகியும், வீட்டுக்கு செல்லாமல், கொரோனா நோயாளிகளை கவனித்து வரும் டாக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக, டாக்டர்களின் பணி நேரம் அதிகரித்துள்ளது. இதனால், நாள் முழுவதும் முக கவசம், முழு பாதுகாப்பு உடை அணிந்து பணியாற்றுகின்றனர். விஜயபுராவை சேர்ந்தவர், மஞ்சுநாத். ஆறு ஆண்டுகளாக, கொப்பால் மாவட்ட மருத்துவ மனையில்,

கொப்பால் : மகன் பிறந்து ஒரு மாதமாகியும், வீட்டுக்கு செல்லாமல், கொரோனா நோயாளிகளை கவனித்து வரும் டாக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, டாக்டர்களின் பணி நேரம் அதிகரித்துள்ளது. இதனால், நாள் முழுவதும் முக கவசம், முழு பாதுகாப்பு உடை அணிந்து பணியாற்றுகின்றனர். விஜயபுராவை சேர்ந்தவர், மஞ்சுநாத். ஆறு ஆண்டுகளாக, கொப்பால் மாவட்ட மருத்துவ மனையில், டாக்டராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், அவருக்கு ஏப்., 1ல், ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியான செய்தி கேட்ட பின்னரும், குழந்தையை பார்க்க செல்லாமல், மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கவனித்து வருகிறார்.

ஆனால், நாள் தோறும் வீடியோ கால் மூலம், மகனை பார்த்து, மகிழ்ச்சி அடைகிறார். இதனால் உற்சாகத்துடன் மீண்டும், மீண்டும் தன் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்.டாக்டரின் பணி சேவையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X