பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் வினியோக மையங்கள் அமைக்கப்படும் ; மாநகராட்சி கமிஷனர்

Added : மே 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு, உதவும் நோக்கில், ஆக்சிஜன் வினியோக மையங்கள் அமைக்கப்படும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் நேற்று கூறியதாவது:கொரோனா நோயாளிகளுக்கு, அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் நோக்கில், மாநகராட்சியின் பத்து பிரசவ மருத்துவமனைகள்,

பெங்களூரு : ''அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு, உதவும் நோக்கில், ஆக்சிஜன் வினியோக மையங்கள் அமைக்கப்படும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் நேற்று கூறியதாவது:கொரோனா நோயாளிகளுக்கு, அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் நோக்கில், மாநகராட்சியின் பத்து பிரசவ மருத்துவமனைகள், ஆக்சிஜன் வினியோக மையங்களாக மாற்றப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனைகளில், அவசர தேவை உள்ளவர்களுக்கு, ஆக்சிஜன் கிடைக்கும்.ராஜாஜிநகர், காவேரிபுரம், கவிபுரம் குட்டஹள்ளி, ஆசாத்நகர், மாகடிசாலை, ஆடுகோடி, தாவரகரே, ஹொசகரேஹள்ளி, சாந்திநகர், வில்சன்கார்டன் பிரசவ மருத்துவமனைகளில், அவசர தேவைக்கு ஆக்சிஜன் அளிக்கப்படும்.

வீட்டில் தனிமையில் உள்ளவர்களுக்கு, ஆக்சிஜன் தேவைப்பட்டால், இந்த சிகிச்சை மையங்களில் சேர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு, ஆக்சிஜன் வேண்டுமானால், உதவி செய்ய, ஒரு குழுவினர் உள்ளனர்.கித்வாய் மெம்மோரியல் இன்ஸ்டியூட் ஆப் ஆன்கோலஜியில், தானியங்கி கொரோனா பரிசோதனை வசதியுள்ளது. தினமும் 6,000 மாதிரிகள் பரிசோதிக்கபடும். இதை, 20 ஆயிரமாக அதிகரிக்க, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கியமான, 50 மருத்துவமனைகளில், பொது சேவை மையங்கள் திறக்கப்படுகிறது. இவற்றில் ஏற்கனவே, 25 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.தினமும், 24 மணி நேரம் இம்மையங்கள் செயல்படும். மக்களின் குழப்பங்களுக்கு, தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X