ரெம்டெசிவிர் மருந்துக்காக, அவதி

Added : மே 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கர்நாடகா மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக, அவதிப்படும் நிலையில், பா.ஜ., - எம்.பி.,க்கள், டப்பாக்களில் மருந்துகளை நிரப்பி கொண்டு செல்வது, குற்றம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரு குயின்ஸ் சாலையின், காங்., அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது: மருந்துக்காக பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகள்,

பெங்களூரு : ''கர்நாடகா மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக, அவதிப்படும் நிலையில், பா.ஜ., - எம்.பி.,க்கள், டப்பாக்களில் மருந்துகளை நிரப்பி கொண்டு செல்வது, குற்றம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு குயின்ஸ் சாலையின், காங்., அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது: மருந்துக்காக பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகள், ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்க உத்தரவிடுகின்றனர்.ஆனால், கர்நாடக அரசு, மருந்துகளை வேறு மாநிலங்களுக்கு, கொண்டு செல்லக்கூடாது என, கட்டுப்பாடு விதித்துள்ளது. முதல்வர் என்னை தொடர்பு கொண்டு, விஷயத்தை கூறினார்.மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை, எங்கள் தொகுதியில் தான் உள்ளது. எனவே எங்கள் தொண்டர்களை அனுப்பி, மக்களின் மனதை கரைத்து, வெளி மாநிலங்களுக்கு சிறிய அளவில், மருந்துகள் அனுப்பப்பட்டது.பா.ஜ., எம்.பி.,க்கள் டப்பாக்களில், மருந்துகளை நிரப்பி, கொண்டு செல்வது சரியல்ல. எந்த சட்டத்தின் கீழ், மருந்துகளை வெளிமாநிலங்களுக்கு, கொண்டு செல்ல தடைவிதித்துள்ளனர்.

கர்நாடகாவில் என்ன நடக்கிறது. நாட்டின் பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதிலளிக்க வேண்டும். ஒரு எம்.பி., மருந்ை கொண்டு செல்ல, அனுமதியளித்தது எப்படி; பணக்காரர்களுக்கு மட்டும், மருந்து வேண்டும்; ஏழைகளுக்கு, கிராமத்தினருக்கு, மருந்துகள் வேண்டாமா.மக்கள் மத்தியில் இருந்து, பணியாற்ற வேண்டும் என, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. எனவே நாங்கள் சகாயவாணி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை துவங்கியுள்ளோம்.அவசர உதவிக்காக, 'கொரோனா வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய, ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படுகிறது. இதை பரிசோதிப்பதற்காக, நானே அழைப்பு விடுத்தேன். 45 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து, எனக்கு ஆக்சிஜன் கொடுக்க முன் வந்தனர்.சமூக வலைதளங்களுக்கு, ஊழியர்களை நியமிக்க, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்., சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு, ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அவர் கட்சி உறுப்பினராக கருதப்படுவார்.இரண்டு மாதங்களுக்கு முன், செயல்படுத்தப்பட்ட திட்டத்தில், இதுவரை 20 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். வரும் நாட்களில், அவர்களை அழைத்து, கட்சியின் சமூக வலைதளப்பிரிவில் சேர்க்கப்படுவர். மக்களின் குரலாக இருக்க விரும்புவோர், 'மிஸ்டு கால்' கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X