பொது செய்தி

இந்தியா

பால்ய திருமணம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Added : மே 02, 2021
Share
Advertisement
கோலார் : ''கோலார் மாவட்டத்தில் பால்ய திருமணம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி வாரிய இணை இயக்குனர் பாலி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:கர்நாடகாவில், 2020ல், ஊரடங்கின் போது, கோலார் மாவட்டத்தில், 56 குழந்தைகள் உட்பட 159 குழந்தைகளுக்கு பாலியல் திருமணம் நடந்தது. அவ்வேளையில், 1975 புகார்கள் வந்தது. 1,816 பேர்

கோலார் : ''கோலார் மாவட்டத்தில் பால்ய திருமணம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி வாரிய இணை இயக்குனர் பாலி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:கர்நாடகாவில், 2020ல், ஊரடங்கின் போது, கோலார் மாவட்டத்தில், 56 குழந்தைகள் உட்பட 159 குழந்தைகளுக்கு பாலியல் திருமணம் நடந்தது. அவ்வேளையில், 1975 புகார்கள் வந்தது. 1,816 பேர் திருமணம் தடுக்கப்பட்டது. தற்போதைய, பொது முடக்கத்தின் போது, குழந்தைகள் திருமணம் நடக்காதபடி கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி,சமூக அக்கறையுடன் ஜில்லா, தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி வாரிய இயக்குனர் டாக்டர் அனுராதாதகவல் தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் பாலியல் திருமணம் தடுப்பு பணியில் 58 ஆயிரத்து, 400 அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுவர்.இது தொடர்பாக, 1,098 என்ற எண்ணுக்கு புகார் செய்யலாம். மேலும் காவல் நிலையம், கிராம பஞ்சாயத்து திட்ட அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர், கிராம கணக்காளர், தாசில்தார், மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், ஜில்லா பஞ்சாயத்து தலைமை அதிகாரியிடமும் புகார் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X