சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரிமம் இல்லாமல் செயல்பட்ட 186 செங்கல் சூளைக்கு தடை!

Added : மே 02, 2021
Share
Advertisement
கோவை : உரிமம் இல்லாமல் செயல்பட்ட 186 செங்கல் சூளைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டது.அந்த

கோவை : உரிமம் இல்லாமல் செயல்பட்ட 186 செங்கல் சூளைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டது.அந்த உத்தரவின்படி அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் இயக்க தடை செய்து, மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் 19ல் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, செங்கல் சூளை உரிமையாளர்கள் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஐகோர்ட் ஏப்., 30 லபிறப்பித்த உத்தரவில், அனுமதிபெற்ற செங்கல் சூளை மட்டும் செயல்பட அனுமதிக்கலாம். உரிமம் பெறாத 186 செங்கல் சூளைகளை இயக்குவது சட்ட விரோதமானது என உத்தரவிட்டுள்ளது. எனவே, செங்கல் சூளைகளை உரிமம் இல்லாமல் இயக்குவது, அனுமதியின்றி சூளைக்கு மண் எடுத்து செல்வது, சுட்ட செங்கலை விற்பனைக்கு எடுத்து செல்வது சட்டப்படிகுற்றமாகும். மீறி செயல்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாத செங்கல் சூளைகள் செயல்படுவது, வாகனம் இயக்குவது தெரியவந்தால், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இது தொடர்பாக, கோவை சுரங்க துறை உதவி இயக்குனருக்கு, 97919 00487, வருவாய் கோட்டாட்சியருக்கு 94459 24164, வடக்கு வட்டாட்சிருக்கு, 94450 00571, காவல் உதவி ஆய்வாளருக்கு 0422 2658955 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X