கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் மம்தா-சுவேந்து அதிகாரியிடையே இழுபறி நீடித்தது. இறுதியில் சுவேந்து அதிகாரியிடம் 1957 ஓட்டுகளில் மம்தா போராடி தோற்றார். இறுதியில், சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மேற்குவங்க சட்டசபையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெற்றது. இதில், மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடியது. மம்தாவுக்கு கடும் சவாலாக விளங்கிய பா.ஜ., ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தியது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, தன்னை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுமாறு சவால் விடுத்தார்.

சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்து இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். அடுத்த சில சுற்றுகளில் பின்னடைவை சந்தித்த மம்தா, பிற்பகலுக்கு பிறகு முன்னிலை பெற்றார். இந்நிலையில், தற்போது மம்தா பானர்ஜி வெற்றிப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் 210 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பா.ஜ., 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றன.
நந்திகிராம் தொகுதியில் தோல்வியை ஏற்பதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.