சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எப்படி புரிய வைப்பது?

Added : மே 02, 2021
Share
Advertisement
எப்படி புரிய வைப்பது?'இவர்களை போன்ற கோமாளிகள் இருக்கும்போது, கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்' என, திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரதா முகர்ஜியை நினைத்து புலம்புகின்றனர், மேற்கு வங்க மக்கள்.முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் சுப்ரதா முகர்ஜி. மேற்கு வங்க மாநில

அக்கம் பக்கம்


எப்படி புரிய வைப்பது?



'இவர்களை போன்ற கோமாளிகள் இருக்கும்போது, கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்' என, திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரதா முகர்ஜியை நினைத்து புலம்புகின்றனர், மேற்கு வங்க மக்கள்.முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் சுப்ரதா முகர்ஜி. மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக, 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவரது சமீபத்திய நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இவர், சட்டசபை தேர்தலில், கோல்கட்டாவில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டார். பிரசாரத்தின் போது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இவர்
பின்பற்றியதே இல்லை. பிரசாரத்துக்கு செல்லும்போது, முக கவசம் அணிய மறுத்து விட்டார். பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், அவரது சொந்த கட்சியினரே, இது குறித்து, அவரிடம் பலமுறை வலியுறுத்தியும், ஏற்க மறுத்து விட்டார். 'பிரசாரத்துக்கு செல்லும்போது, முக கவசம் அணிந்திருந்தால், மக்களுக்கு என்னை எப்படி அடையாளம் தெரியும்...' என, அப்பாவித் தனமாக எதிர் கேள்வி கேட்டார். மேற்கு வங்க மக்களோ, 'இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம்; ஆனால், உயிர் போனால் திரும்ப வருமா... இந்த மனிதருக்கு, இதை எப்படி புரிய வைப்பது' என, தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X