சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்: தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியம். தேர்தல் என்பது முடிவல்ல. இந்த தேர்தல், நமக்கு ஒரு புதிய அனுபவம்; புதிய தொடக்கம். வெற்றி எனில், கொண்டாடத் தேவை இல்லை; தோல்வி எனில் துவள வேண்டியதில்லை.'டவுட்' தனபாலு: கட்சி துவக்கி, மூன்றாண்டுகளுக்குள் ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற

'டவுட்' தனபாலு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்: தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியம். தேர்தல் என்பது முடிவல்ல. இந்த தேர்தல், நமக்கு ஒரு புதிய அனுபவம்; புதிய தொடக்கம். வெற்றி எனில், கொண்டாடத் தேவை இல்லை; தோல்வி எனில் துவள வேண்டியதில்லை.

'டவுட்' தனபாலு: கட்சி துவக்கி, மூன்றாண்டுகளுக்குள் ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற ரீதியில், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, ஏராளமான மக்களை சந்தித்து பிரசாரம் செய்தீர்கள். ஆனால், வெளியான கருத்துக் கணிப்புகள், உங்களை ஏமாற்றத்தில் தள்ளியிருக்குமோ என்ற, 'டவுட்' வருகிறது. ஒரு இடம் கூட, உங்கள் கட்சிக்கு கிடைக்காது என சொல்லிய கருத்துக் கணிப்புகளால் தான், புதிய அனுபவம், புதிய தொடக்கம் என்கிறீர்களோ!

தமிழக முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,: அ.தி.மு.க.,வினரும், அ.தி.மு.க., மீது பேரன்பு கொண்ட நல்லோரும், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் போது, அமைதியுடன், விழிப்புடன், ஆற்றலுடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழலில், அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது. அது, சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை என்பதை மறவாதீர்.

'டவுட்' தனபாலு: ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சட்டசபை தேர்தல் முடிவை அறிய, உலகமே ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு, கொரோனா என்ற பூதம் கையை விரித்து கொடூர ஆட்டம் போட்டுக் கொண்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் வித்தியாசமானவை தான் என்பதில் யாருக்கும், 'டவுட்'டே வராது!சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை பொருளாதாரத்தை முடக்கி, தீவிரத்தன்மையை காட்டிச் சென்றது. தற்போது, இரண்டாம் அலை, முன்பை விட பலமடங்கு வீரியத்துடன் பாதிப்பை உண்டாக்குகிறது. வரும், இரு வாரங்களுக்கு, கொரோனா எத்தனை உயிர்களை பலியிடும் என, கணிக்க முடியாத அளவிற்கு, அதன் பரவல் தீவிரமாக இருப்பதால், மக்கள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில், அதுபற்றி அறிக்கை விடாமல், கொரோனா தொற்று பற்றி அறிக்கை விட்டு, அனைவரும், 15 நாட்களுக்கு வீட்டினுள் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளீர்கள். இதன் மூலம் உங்களுக்கு, தேர்தலை விட, மக்கள் நலனே பெரிது என்பது, அனைவருக்கும், 'டவுட்' இன்றி புரிந்திருக்கும்!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
03-மே-202116:10:23 IST Report Abuse
Dhanraj Jayachandren Kamaluku appan valartha katchiyum.illai, yaar kaalaiyum.vizhunthu Mela varala...Stalin/ EPs evalo perusal jeichalum.andha vetri avangaoldathu illai...Kamal evalo perusa Thothalum...jeichalum...meesaiya murkura thimrum dhillum.irukku...
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
03-மே-202110:16:27 IST Report Abuse
a natanasabapathy சரத்குமாருக்கு தனது கட்சி போனியாகாது என்று நன்கு தெரியும் எனவே தேர்தல் பற்றி பேச வில்லை. துக்கடா கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதை பெரிய கட்சிகள் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் சுயநலத்துக்காக கட்சி ஆரம்பிப்பது தடுக்க படும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-மே-202106:06:51 IST Report Abuse
D.Ambujavalli கட்சி தொடங்கி மூன்றாண்டுகளிலேயே பிரபலத்தை எதிர்த்து நின்று, அப்படியும் அவர்களுக்கே டென்சன் வருமளவு முன்னிலை நின்று, வெகு குறைவான வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறார் கட்சியின் ஒத்துழைப்பும், வளர்ச்சியில் கருத்தும் செலுத்தினால், அடுத்த முறை வெற்றிக்கு வாய்ப்புண்டு மோடிஜியும் ஷாவும் நடையாய் நடந்து, பிரசாரம் செய்து, கடைசியில் அந்தம்மா ஒருமாதிரி வெற்றி பெற்றிருக்கிறார் கமல் மோதியது பிரபலத்துடன். அதில் பெற்ற தோல்வியும் கௌரவமானது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X