சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ரஜினி ஒரு தீர்க்கதரிசி!

Added : மே 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ரஜினி ஒரு தீர்க்கதரிசி!முளு.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினி, கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த டிச., 29-ல், 'நான் அரசியலுக்கு வரவில்லை; என்னை மன்னியுங்கள்' எனச் சொல்லி, பின் வாங்கினார்.அவரது இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களை


ரஜினி ஒரு தீர்க்கதரிசி!முளு.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினி, கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த டிச., 29-ல், 'நான் அரசியலுக்கு வரவில்லை; என்னை மன்னியுங்கள்' எனச் சொல்லி, பின்
வாங்கினார்.அவரது இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, மாற்று அரசியலை எதிர்பார்த்து காத்திருந்த நடுநிலையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ரஜினியின் இந்த முடிவை, பலரும் பலவிதமாக விமர்சனம் செய்தனர்; ஆனால், அவரோ தன் முடிவில் உறுதியாக இருந்தார்.'கொரோனா பரவல் அதிகரிக்கும். என் சுயநலத்திற்காக, நான் யாரையும் பலிகடா ஆக்க விரும்பவில்லை' என, தன் நிலையை தெளிவுபடுத்தினார்.அரசியலில், ரஜினியோடு இணைந்து பயணிக்க நினைத்த தமிழருவி
மணியன் விரக்தி அடைந்து, 'நான் இனிமேல் அரசியலுக்கு வரவில்லை' என, அறிவித்தார்.இந்நிலையில், தமிழருவி மணியனுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. சித்த மருத்துவ சிகிச்சை பெற்று, நலமடைந்து,
வீடு திரும்பியுள்ளார். அவர், 'ரஜினி எடுத்தது நல்ல முடிவு என்பதை, இப்போது உணர்ந்து கொண்டேன்' எனக் கூறியுள்ளார்.'கொரோனா முழு வீச்சில் பரவக் காரணம், ஐந்து மாநில தேர்தல் தான். தேர்தல்
பிரசாரத்தில் கூடிய மக்கள் கூட்டம் தான் காரணம். இதை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தை கொலைக் குற்றவாளி என்று கூட அறிவிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் மூலம் கொரோனா பரவும் என, ரஜினி அன்று சொன்னதை, இன்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது!
தமிழ் மக்களின் சினிமா மோகம், உலகறியும். துண்டு துக்கடா நடிகர் வந்தாலே, கட்டுக்கடங்காத கூட்டம் கூடும்.உலக அளவில் புகழ் பெற்ற, 'சூப்பர் ஸ்டார்' ரஜினி, நம் ஊருக்கு வருகிறார் என்றால், மக்கள் கூட்டம் அலை மோதும்; அதன் மூலம், கொரோனா பரவும். இதை உணர்ந்த ரஜினி, தான்
அரசியலுக்கு வருவதை விட, மக்களின் உயிர் தான் முக்கியம் என, அறிவித்தார்.அவர் பதவிக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தார்.
ஆனால் காலம், வழிவிடவில்லை; நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டார்.தேர்தலால் கொரோனா பரவும் என்பதைச் சொன்ன அவர், தீர்க்கதரிசி தான் என்பதில் சந்தேகம் இல்லை.


யாரும் சிரஞ்சீவி இல்லை!ஸ்வாதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது மாதிரி, நடிகை குஷ்பு, 'என்னால், ஒருவருக்காவது கொரோனா வந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' எனக் கூறி இருக்கிறார்.
அவராவது, கொரோனா காலத்தில், தான் தேர்தல் பிரசாரம் செய்தது தவறு என்பதை உணர்ந்து இருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளுக்கு, எந்த குற்ற உணர்வும் இல்லை. அவ்வகையில், குஷ்புவை பாராட்டலாம்.கொரோனா தடுப்பு நிதிக்கு, மாற்றுத்திறனாளியான, பீடி தயாரிக்கும் தொழிலாளி ஒருவர், தன் சேமிப்பிலிருந்து, 2 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியகிரிக்கெட் வீரர் பாட்
கம்மின்ஸ், இந்திய மருத்துவமனைகள், ஆக்சிஜன் வாங்குவதற்காக, 37 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்.இப்படி, நாம் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து, நிதியுதவி வரும்போது, அதிக வருவாய் பெறும், நம் நாட்டு அரசியல்வாதி, நடிகர், கிரிக்கெட் வீரர்களும்,
எவ்வித மனசாட்சி உறுத்தலுமின்றி, கண்டு கொள்ளாமல் உள்ளனர். 'செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்' என்ற, அவ்வையின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள பணம் படைத்தோர் எல்லாம், அரசு போதிய நிதியின்றி தவிக்கும் போது உதவ முன்வர வேண்டும்.எப்போதும், அரசை குறை கூறியபடியே இருக்காமல், நாடு தத்தளிக்கும்போது கைகொடுக்க முன்வர வேண்டும். அரசு என்பது, நாம் தான் என்பதை,
மக்கள் உணர வேண்டும்.'கூகுள், மைக்ரோ சாப்ட்' ஆகிய பெரிய நிறுவனங்கள், நம் நாட்டுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களும், தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.இது, மூன்றாவது உலக யுத்தம் என நினைத்து, மக்கள் அனைவரும், நம் நாட்டை காக்க போராட வேண்டும்.
முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், அரசின் உத்தரவுகளை மதித்தும் நடக்க வேண்டும்.'எனக்கு கொரோனா வராது' என, நினைக்க வேண்டாம். யாரும் இங்கு, சிரஞ்சீவி இல்லை; முன்னெச்சரிக்கை
நடவடிக்கையே, நம்மை காக்கும்.


நம் நாளிதழுக்கு பாராட்டுகள்!எம்.சீனிவாசன், கவரைப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல், தேசத்தின் நலனுக்காக எப்போதும் துணிச்சலான கருத்துகளை, நம் நாளிதழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
நம் நாட்டில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்பதையும், அவசர நிலை கருதி, அதற்கு அனுமதி அளிக்க
வேண்டும் என்றும், நம் நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.தமிழகத்தில், முக்கிய அரசியல்வாதிகள் சிலர் நடத்தும், பல மதுபான ஆலைகள் இயங்கு
கின்றன. இதற்கு, எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.மக்கள் உயிரைக் காப்பாற்ற, ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கொரோனா பரவலை தடுப்பதற்காக, தமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதும், 'டாஸ்மாக்' மது விற்பனைக்கு மட்டும், எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.
டாஸ்மாக் கடையை மூடிவிட்டால், மதுபான ஆலை உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமே என்பதால் தான், மது விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை.'மக்கள், அரசியல்வாதிகளின் சதியை புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, நம் நாளிதழுக்கு பாராட்டுகள்!

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinu J - Chennai,இந்தியா
03-மே-202117:21:48 IST Report Abuse
Vinu J தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவாகி அங்கங்கு கொண்டாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்பார்த்த முடிவுதான் இது. விடியல் தரப்போகிறேன் எனபதுதான் வென்ற கட்சியின் தலைவரின் உறுதிமொழி.சூரியன் விடியலில் பாரபட்சம் காட்டாது.வெளிச்சத்தை எங்கும் பரவச்செய்யும். வென்றவரும் சூரியனின் குணங்களை நினைவில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தினால் , அவர் தோற்கவேண்டும் என்று நினைத்தவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.துறை சார்ந்த வல்லுநர்களை துணை கொண்டு வருங்காலங்களில் ஆட்சி செய்வது அவர்களுக்கும் நாட்டிற்கும் நலம் சேர்க்கும் .மக்கள் தேர்ந்தெடுத்தத் தலைவர் , மக்களும் தனது குடும்பம்தான் என நினைத்து பாடுபட்டால் . அவரை தலையில் தூக்கி வைத்துக் கொள்ள மக்கள் தயாராக இருப்பார்கள்.
Rate this:
Cancel
J. Lakshminarayanan - சென்னை,இந்தியா
03-மே-202115:20:48 IST Report Abuse
J. Lakshminarayanan தேர்தலில் திமுக வின் வெற்றியும் ஆட்சியும் ஏதோ தங்கள் ஆட்சியின் மேல் விருப்பப்பட்டு தான் மக்கள் வாக்களித்தனர் என்று திமுக நினைத்தால் அது அவர்களின் பைத்தியக்காரத்தனம் என்பதில் மாற்று கருத்து இருக்காது. ஆரம்ப காலம் தொட்டே, திமுக ஆட்சிக்கு வந்தது முந்தைய ஆட்சியாளர்களின் மேல் மக்களுக்கு இருந்த வெறுப்பு தான் காரணம். இப்போதும் அது தான் நிகழ்ந்திருக்கிறது. எந்த அனுபவமும் இல்லாமல் கருணானிதியின் புதல்வன் என்ற ஒரே காரணத்துக்காக முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே தான் அவர் மகன் உதயநிதிக்கும் பொருந்தும். ஏதோ இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் நாடே புனிதம் அடைவது போல மக்கள் பூரித்து போனால் அது மக்களின் மடத்தனமே அன்றி வேறெதுமில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததால், இனி ரௌடிகளின் ஆட்டம் அதிகரிக்கும். கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களிலிருந்து அடி மட்ட தொண்டர்கள் வரை இனி எல்லா கடைகளிலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றலாம். நில அபகரிப்பில் தைரியமாக ஈடுபடலாம். திரை அரங்குகளையும், திரை துறையையும் பகிரங்கமாக மிரட்டலாம். இந்து மதத்தையும், வாக்களித்த இந்துக்களையும் கேவலமாக பேசலாம். அப்படி பேசும் கூட்டணிக் கட்சியினரை எந்த வகையிலும் கண்டிக்காமல் தட்டி கொடுத்து ஆதரவு கொடுக்கலாம். சிறுபான்மையினர் போர்வையில் கிறிஸ்தவர்கள் எந்த பயமும் இன்றி மதமாற்றம் செய்யலாம். இஸ்லாமியர்கள் தங்களுக்கென தனி சட்டமும் கேட்கலாம். அமைச்சர்கள் தங்கள் பதவியையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அனைத்து ஊழல்களையும் பகிரங்கமாக செய்யலாம். எந்த தொலை நோக்கு பார்வையும் இல்லாத ஒருவர் தமிழகத்துக்கு முதல்வர் ஆகப் போவது தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம். தமிழக மக்களை எந்த கல்வியறிவும் பெறாமல், சினிமா மோகத்தில் ஆழ்த்தியே வைத்திருப்பதில் தான், எந்த கேள்வியும் குற்றச்சாட்டும் மக்கள் தங்களை கேட்காமல் இருப்பதற்கான ஒரே வழி என்று கடைபிடிக்கின்றனர். அடுத்த 5 வருடத்துக்கு தமிழகம் இருளை நோக்கிப் போகப் போகிறது என்பதில் எந்த மாற்றமில்லை. காமராஜரை தோற்கடித்து திராவிட ஆட்சியை கொண்டு வந்ததன் பலனை இன்று வரை தமிழகம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. இது இன்னும் 5 வருடங்களுக்கும் தொடரப் போகிறது. தமிழகத்தின் தலைவிதி
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
03-மே-202108:45:15 IST Report Abuse
Darmavan மது ஆலைகளை,டாஸ்மாக்குகளை மூடாமல் நோய் பரவலை தடுக்க முடியாது.அரசு செய்வது கண் துடைப்பு வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X