சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கொரோனா சிகிச்சை பணிக்கும் 'கமிஷன்!'

Added : மே 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொரோனா சிகிச்சை பணிக்கும் 'கமிஷன்!'நாயர் கடையிலிருந்து வாங்கி வந்த பார்சல் டீயை, நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார், அண்ணாச்சி.''அப்பாடா தேர்தல் பரபரப்பெல்லாம் முடிஞ்சுது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சேலம் மாவட்டத்துல இருந்து ரேஷன் அரிசியை, கர்நாடகா, கேரளாவுக்கு கடத்துற வேலை ரொம்ப வருஷமாகவே நடக்கறது... இந்த வேலையை செய்யறது எல்லாமே


 டீ கடை பெஞ்ச்


கொரோனா சிகிச்சை பணிக்கும் 'கமிஷன்!'நாயர் கடையிலிருந்து வாங்கி வந்த பார்சல் டீயை, நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார், அண்ணாச்சி.

''அப்பாடா தேர்தல் பரபரப்பெல்லாம் முடிஞ்சுது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டத்துல இருந்து ரேஷன் அரிசியை, கர்நாடகா, கேரளாவுக்கு கடத்துற வேலை ரொம்ப வருஷமாகவே நடக்கறது... இந்த வேலையை செய்யறது எல்லாமே ரவுடிகள் தான் ஓய்...

''இக்கும்பல், உள்ளூர் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை 'கவனிக்கறதால' ரேஷன் அரிசி கடத்தல் ஜோராக நடக்கறது... யாராவது போலீஸ்காராகிட்ட புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கே, ரவுடிகள் போய் மிரட்டறாளாம் ஓய்...

''இப்பிரச்னை பெருசா வெடிக்க இருக்கறதால, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோரின் பட்டியலை தயாரித்து, நடவடிக்கை எடுக்க களம் இறங்கியிருக்கா...

''இவங்களை எப்படி சரிக்கட்டறதுன்னு, ரவுடிகள் யோசிச்சிண்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''இந்த அரசியல்வாதிகள் சும்மா இருந்தாலே, கொரோனா பரவாதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன விஷயத்துக்காக இதை சொல்லுறீர் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கிருஷ்ணகிரியில, ரெண்டு நாளைக்கு முன்னாடி, தி.மு.க., சார்புல, கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்துச்சுங்க... அதுல, மாவட்ட பொறுப்பாளர்
செங்குட்டுவன் வந்து,
மக்களுக்கு கபசுர குடிநீர், முட்டை, முக கவசம், சானிடைசரை எல்லாம் கொடுத்தாருங்க...

''அதை வாங்குறதுக்காக அழைச்சுட்டு வந்த மக்கள், முண்டியடிச்சு அந்த பொருட்களை வாங்கினாங்க... சமூக இடைவெளி எல்லாம், எதுவும் இல்லைங்க...

''கொரோனா தொற்றை தடுக்குறோம்ன்னு, இந்த அரசியல்வாதிகள் நடத்துற கூத்துல தான், அந்த நோய் அதிகளவுல பரவுது... முதல்ல, இதை தடுக்கணுமுங்க...'' என முடித்தார்,
அந்தோணிசாமி.
''இவங்களை திருத்தவே முடியாது பா...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''யாரை சொல்லுறீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கொரோனா பரவல், மே மாசத்துல உச்சத்தை எட்டுமுன்னு, சுகாதாரத்துறை எச்சரிச்சுருக்கு... எனவே, முன்னெச்சரிக்கையாக, அரசு மருத்துவமனைகள்ல ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுருக்கு பா...

''இதையடுத்து, பொதுப்பணித் துறையின் மருத்துவ பணிகள் பிரிவு, மாநிலம் முழுதும் இருக்குற அரசு மருத்துவமனைகள்ல, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகளை, ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணியை துவங்கியிருக்கு பா...

''சென்னையில் மட்டும், 139 கோடி ரூபாய் செலவுல, 2,500 படுக்கை வசதி ஏற்படுத்துறாங்க... அரசு நிதி ஒதுக்காத நிலையில, ஒப்பந்ததாரர்கள்
இப்பணிகளை செஞ்சுக்கிட்டு இருக்காங்க பா...

''அந்த ஒப்பந்ததாரர்களிடம், பொதுப்பணித்துறை மருத்துவ பணிகள் பிரிவு உதவி பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் என எல்லாரும், 'கமிஷன்' கேட்டு தொல்லை பண்ணுறாங்களாம் பா...

''கொரோனா பிரச்னையில, நாடே தத்தளிக்கும்போது, இந்த அதிகாரிகள் நடந்துக்குற விதத்தை பாருங்க பா...'' என, விரக்தியுடன் முடித்தார்,
அன்வர்பாய்.அண்ணாச்சி வீட்டில் இருந்து, நண்பர்கள்
கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
04-மே-202111:52:30 IST Report Abuse
venkata achacharri இதற்க்கு தனி கோர்ட்டு அமைத்தால் தான லஞ்சம் ஒளியும்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
03-மே-202108:56:52 IST Report Abuse
R.RAMACHANDRAN இப்படிப்பட்ட எதிலும் லஞ்சம் பெரும் அதிகாரிகளுக்கு சம்பளம் ஓய்வூதியம் ஒரு கேடு.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-மே-202106:15:10 IST Report Abuse
D.Ambujavalli இன்று உயிருடன் இருக்கிறோம் என்பதே வரம் என்னும் நிலையில்கூட லஞ்சம், கமிஷனை மறக்காத இவர்களுக்கு புத்தி வரவாவது கொரானா வந்து சற்று சாம்பிள் காட்டி, உயிர் பயத்தை ஏற்படுத்தி, நல்வழி படுத்தினால் பரவாயில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X