பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 02, 2021
Share
Advertisement
மே 3, 1971வேலுாரில், செல்வச் செழிப்பான குடும்பத்தில், 1885ல் பிறந்தவர், ஆர்.நடராஜ முதலியார். பள்ளி படிப்பு முடிந்து,சென்னைக்கு வணிகம் செய்ய வந்தார்.வெளிநாடுகளில் இருந்து மிதிவண்டிகளை இறக்குமதி செய்து, விற்று வந்தார். பின், 'இந்தியா பிலிம் கம்பெனி' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கினார். சென்னை, புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில், தென்மாநிலத்தின் முதல்

இதே நாளில் அன்று


மே 3, 1971



வேலுாரில், செல்வச் செழிப்பான குடும்பத்தில், 1885ல் பிறந்தவர், ஆர்.நடராஜ முதலியார். பள்ளி படிப்பு முடிந்து,சென்னைக்கு வணிகம் செய்ய வந்தார்.வெளிநாடுகளில் இருந்து மிதிவண்டிகளை இறக்குமதி செய்து, விற்று வந்தார். பின், 'இந்தியா பிலிம் கம்பெனி' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கினார். சென்னை, புரசைவாக்கம்,
மில்லர்ஸ் சாலையில், தென்மாநிலத்தின் முதல் ஸ்டூடியோவை அமைத்தார்.கடந்த, 1917ல், கீசக வதம் என்ற மவுன படத்தைத் தயாரித்தார். இதன் ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு போன்ற பொறுப்புகளிலும், அவரே பணியாற்றினார். 6,000 அடிகளுக்கும் மேல் நீளமுள்ள இப்படமே, தென்மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம்.தொடர்ந்து திரவுபதி வஸ்திராபகரணம், லவ குசா, ருக்மணி சத்யபாமா, மயில் ராவணா ஆகிய மவுன படங்களைத் தயாரித்து வெளியிட்டார். 1971 மே 3ம் தேதி, தன், 86வது வயதில் காற்றில் கலந்தார்.'தமிழக திரைப்படத் துறையின் தந்தை'
ஆர்.நடராஜ முதலியார், காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X