சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 02, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்நீர்ச்சத்து மிக்க காய், பூசணி வகை காய்களில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெயில் காலத்துக்கு ஏற்றது. இவை 'ஸ்குவாஷ்' என அழைக்கப்படுகிறது. 'ஸ்குவாஷ்' என்றால் அமெரிக்க பழங்குடியினர் மொழியில் 'பச்சையாக சாப்பிடுவது' என அர்த்தம். இதில் இரு வகை உள்ளன. வெயில் கால வகையான சவ்சவ், பீர்க்கங்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளதால் சத்து குறைவாக உள்ளன. இவற்றை

அறிவியல் ஆயிரம்
நீர்ச்சத்து மிக்க காய்

, பூசணி வகை காய்களில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெயில் காலத்துக்கு ஏற்றது. இவை 'ஸ்குவாஷ்' என அழைக்கப்படுகிறது. 'ஸ்குவாஷ்' என்றால் அமெரிக்க பழங்குடியினர் மொழியில் 'பச்சையாக சாப்பிடுவது' என அர்த்தம். இதில் இரு வகை உள்ளன. வெயில் கால வகையான சவ்சவ், பீர்க்கங்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளதால் சத்து குறைவாக உள்ளன. இவற்றை தோலுடன் சாப்பிடலாம். தடித்த தோலை கொண்டிருக்கும் குளிர்கால வகையான வெள்ளைப்பூசணி. சுரைக்காய் போன்றவற்றின் தோலை சாப்பிட முடியாது.
தகவல் சுரங்கம்
சூரை மீன் தினம்

கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் சூரை மீன் (டுனா) தான். அதே போல் உலகில் விற்பனை செய்யப்படும் மீன், மீன் சார்ந்த உணவுகளில் 8 சதவீதம் இவ்வகை மீன் தான். இந்த மீன் வகையை பாதுகாக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 3ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் வரிச்சூரை, மஞ்சள் துடுப்பு சூரை, பெரிய கண் சூரை என மூன்று வகைகள் உள்ளன. இந்த மீன்கள் ஒரே சீரான தட்பவெப்ப நிலையை விரும்பும். அந்த நீரோட்டத்தை அடையாளம் கண்டு கடல் வழியாக கண்டம் விட்டு கண்டம் செல்லும் இயல்புடையது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X